நீங்கள் அவர் சத்தம் கேட்டதுமில்லை, அவர் ரூபம் பார்த்ததுமில்லை.
Father sent Me,testified of Me.You have neither heard His voice at any time, nor seen His form. (John 5:37)
Jn6:27,46;1:18;8:18;10:36;14:7-9;1Tim1:17;6:15,16;1Jn1:1,2;4:12,20.
என்னை அனுப்பின பிதா தாமே எனனைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்:நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. (யோவான் 5:37)
யோவான் 6:27,46; யோவான் 1:18; யோவான் 8:18; யோவான் 10:36; யோவான் 14:7-9; 1தீமோத்தேயு 1:17; 1தீமோத்தேயு 6:15,16; 1யோவான் 1:1,2; 1 யோவான் 4:12,20.
தேவன் காணக்கூடியவரா?
விவிலியத்தின் ப.ஏ புத்தகங்கள் தேவனை குறித்து 5 காரியங்களை எடுத்து கூறுகின்றது.
– தேவன் காணக்கூடியவராய் இருந்தார்.
– நமது பாவம் அவரை மறைத்து விட்டது.
– மனிதர் அவரை கண்டு உயிரோடு வாழமுடியாது.
– தேவன் தம் விருப்பபடி தம்மை சில மனிதர்க்கு வெளிப்படுத்தி காண்பிக்க இயலும். இது அவரின் விருப்பம்.
– அவரை காண, சத்தம் கேட்கவே வெளிப்பாடுகளையும், தரிசனங்களையும், அசரீரிகளையும் வைத்துள்ளார்.
விவிலியத்தின் பு.ஏ ல் கொடுக்கபட்டுள்ள காரியம் என்னவெனில் தேவனை மனிதர் பார்க்கவியலாது என்பதாகும்.
ஆனால் தேவனை மனிதர் பார்க்கவேண்டும், அவர் சத்தம் கேட்கவேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்துவை தேவன் உலகிற்கு அனுப்பினார்.
இயேசுவை கண்டவர், அறிந்தவர், விசுவாசித்தவர் தேவனை காண இயலும், சத்தம் கேட்க இயலும்.
மனிதர் தேவனை எளிதாக அணுகுவதற்காகவே தேவன் இயேசுவை அனுப்பினார்.
இயேசுவின் வழியாக அல்லாது வேறு எந்த வழியாகவும் தேவனை மனிதர் நெருங்கவியலாது.
ஏனெனில் இயேசுகிறிஸ்து வழியாக மட்டுமே மனிதரின் பாவங்கள் பரிகரிக்கபட்டு – தூய்மையாகி தேவனை காணமுடிகிறது, சத்தம் கேட்க முடிகிறது.
இயேசுவை மறுதலிக்கிறவர்களும், இயேசுவை வெறுக்கிறவர்களும், இயேசுவை பாவபரிகாரியாக ஏற்றுக்கொள்ளாதவர்களும் ஒருபோதும், ஒருக்காலும்
தேவனிடம் செல்லவும் முடியாது, தேவனை காணவும் முடியாது,
தேவ சத்தம் கேட்கவும் முடியாது, சொர்க்கலோகம் செல்லவும் முடியாது, தேவனிடமிருந்து எதையும் பெறவும் முடியாது.
இரட்சிக்கப்பட்டு தேவனோடு நல் உறவில் இருந்து திரும்பவும் பாவ வாழ்வுக்கு சென்ற எந்த ஊழியனும், விசுவாசியும், தலைவர்களும் தேவனை நெருங்கவும் முடியாது, தேவனோடு நடக்கவும் முடியாது, தேவ சத்தம் கேட்கவும் முடியாது.
பாவமே நமக்கும், தேவனுக்கும் இடையிலுள்ள தடுப்பு சுவர், பகை, கார்மேகம், பிளவு.
பாவத்தை வைத்துகொண்டு ஒருவரும் தேவனோடு நடப்பதாக கூறவியலாது. அது மாய்மாலம்.
கர்த்தாவே, உம்மை எங்களுக்கு வெளிப்படுத்திடுத்த உம் மகனை எங்கள் பாவபரிகாரியாக தந்ததற்காய் நன்றி. இனி நாங்கள் விபசாரம், பொருளாசை, விக்கிரக ஈடுபாடு, குடிவெறி, துர் உபதேச ஐக்கியம், பகை, பிரிவினைகள் போன்ற பாவங்கள் செய்யாது உம்மோடு இணைந்து வாழ்ந்து எங்களுக்காய் வாக்களிக்கப்பட்டுள்ள உயர் வாழ்விடத்தில் வந்துசேர எங்களுக்கு உதவி செய்யும்.