தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளில் இருக்கிறான்.

தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளில் இருக்கிறான்.

He who says he is in the light, and hates his brother, is in darkness until now. (1John 2:9)

1John 1:6; 1john 2:11; 1John 3:13-17; John 9:41; Romans 2:18-21; 1Corinthians 13:1-3; Psalms 82:5.

ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். (1 யோவான் 2:9)

1யோவான் 1:6;2:11; 1யோவான் 3:13-17; யோவான் 9:41; ரோமர் 2:18-21; 1கொரிந்தியர்13:1-3; சங்கீதம்82:5.

இருளில் இருப்பவன் யார்?

அன்றாடம் இருளிலே வாழ்கிறவன் இருளின் பிள்ளையாயிருப்பதினால் அவனில் அன்பு இல்லை. அதேவேளையில் நான் ஒளியில் இருக்கிறேன், நான் கற்பனைகளை கைக்கொள்ளுகிறேன், நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன், நான் அபிஷேகம் பெற்றுள்ளேன், நான் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளேன், நான் கிறிஸ்தவன் என்று தன்னை சொல்லிக்கொள்கிறவன் தன் சகோதரனைப் பகைக்கிறவனாயிருந்தால் அவன் இருளிலே குடிகொண்டிருக்கிறவனாயிருக்கிறான் என்று பொருளாகும்.

இது எந்த சகோதரனைக் குறிக்கின்றது?
எந்தவொரு இரட்சிக்கப்பட்ட மனிதனுக்கும் – இயேசுவை ஏற்றுக்கொண்டவனுக்கும் இரு சாரார் உடன் சகோதரர்களாயிருக்கிறார்கள். ஒன்று தந்தை தாயின் உதிரத்திலிருந்து பிறந்தவன். இவ்வுலக இரத்த சம்பந்தமானவன். உடன் பிறந்தவர்கள். இவர்கள் மாம்ச உறவின் மக்களாவர். இரண்டாவது சகோதரர்கள் எனப்படுவோர் இயேசுவின் இரத்தத்தால் பிறந்தவர்கள். ஒரே சரீரமாகிய சபையில், ஒரே பாத்திரத்தில் பருகி ஒரே ஞானபானத்தை குடிக்கிறவர்கள். இவர்கள் ஆவியின் உறவின் மக்களாவர். இந்த இருவரும் உடன் சகோதரர்களாயிருக்கிறார்கள்.

இந்த சகோதரர்களைப் பணத்தின் அடிப்படையிலோ, அந்தஸ்தின் அடிப்படையிலோ, கல்வியின் அடிப்படையிலோ, செல்வாக்கின் அடிப்படையிலோ, ஜாதி மொழி இனம் அடிப்படியிலோ, நிறங்களின் அடிப்படையிலோ வெறுப்பதும் பகைப்பதும் ஒதுக்குவதும் தள்ளிவிடுவதும் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனுக்கு அழகல்ல, இப்படி செய்கிறவர்கள் ஒளியை அல்ல இருளை கொண்டிருப்பவர்களும், அன்பை அல்ல பகைமையைக் கொண்டிருப்பவர்களும் ஆவர். இவர்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு அந்நியர்களாகின்றனர்.

இரட்சிக்கப்படாத ஒருவன் இருளில் இருந்து நரகாக்கினைக்கு உட்படுவதைவிடவும், இரட்சிக்கப்பட்டிருந்தும் தன் உடன் சகோதரனை பகைக்கிறவன் அதிக நரகாக்கினைக்குரியவனாயிருக்கின்றான். அதிக கேடுள்ளவனாகின்றான். முந்தினவன் பகையாளியாயிருக்கிறான். பிந்தினவன் துரோகியாகின்றான்.

இப்படியிருப்பதினால் இருளின் கிரியைகளை ஒளித்துவிட்டு ஒளியின் கிரியைகளை செய்கிறவர்களாவோம்.

இருளில் இருப்பவன்….
மாம்சீக புயபலத்தில், மாம்சீக காரியங்களில், உலக காரியங்களில் அதிக ஆவல் உள்ளவனாயிருப்பான்.
ஆவிக்குரிய காரியங்களை நிதானிக்க இயலாததினால் அவைகளில் நாட்டமில்லாதவனாயிருப்பான்.
கோபமும், சண்டையும், அடங்காதன்மையும், எதிர்த்து நிற்றலும், கீழ்படியாமையும் உடையவனாயிருப்பான்.

சில கேள்விகள்…
இக்காலத்திலுள்ள கிறிஸ்தவர்களில் எத்தனை பேர் ஒளியில் வாசம் செய்கிறார்கள் என்று அனுமானிக்க முடியுமா?
அபிஷேகம் பெற்றவனும் கண்ணியில் அகப்பட்டான் என்பதின் பொருள் இதுதானோ?

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. 2பேதுரு 1:5-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME