சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்
And this commandment we have from Him: that he who loves God must love his brother also. (1John 4:21)
1John 4:11; Matthew 22:37-39; Luke 10:37; John 13:34,35; John 15:12; Romans 12:9,10; Romans 13:9,10; Galathians 5:6; 1Thessalonians 4:9.
தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம். (1 யோவான் 4:21)
1யோவான் 4:11; மத்தேயு 22:37-39; லூக்கா 10:37; யோவான் 13:34,35; யோவான் 15:12; ரோமர் 2:9,10; ரோமர் 13:9,10; கலாத்தியர் 5:6; 1தெசலோனிக்கேயர் 4:9.
கிறிஸ்துவினால் உண்டான கற்பனை.
யாக்கோபு என்ற இஸ்ராயேலின் 12 குமாரர்களும் 12 கோத்திரங்களாகி இஸ்ராயேல் தேசமாக மாறினர். தவறுகள் நடந்தால் இவர்களுக்குள் சகோதரர்கள் என்றுகூட பார்க்காமல் கொலை செய்தார்கள். இரக்கத்திற்கு இடமில்லை. பென்யமீன் கோத்திரத்தை பழிவாங்கவும் செய்தார்கள். சகோதர சிநேகம் சில பகுதிகளில் காணப்பட்டாலும் சகோதரனை கொலை செய்வது, ஒதுக்கி வைப்பது, வெறுப்பதை குறித்து பல இடங்களில் காண்கின்றோம். இதற்கு நேர் எதிர்மாறாக பகைவனையும் நேசிக்க வேண்டும், சகோதரனையும் நேசிக்க வேண்டும் என்பதை ஒரே கோட்டில் வைத்து பார்க்கின்றார் இயேசு கிறிஸ்து.
இயேசுகிறிஸ்துவின் சகோதரர்களோடு இயேசு கிறிஸ்துவுக்கு கருத்து மோதல்கள் காணப்பட்டது. ஆனால் மாம்சீக மோதல்களோ, வெறுப்பும் பகைமையுமோ காணப்படவில்லை. இந்த கருத்து மோதல்கள் யாவும் இயேசுவை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டபின்பு மறைந்தே போனது. ஆகையினால் இயேசுவின் சகோதரர்கள் இயேசுவுக்கு பின்பதாக திருச்சபையின் உருவாக்க வரலாற்றில் முக்கிய பங்காற்றினர். இக்கால கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு தகுந்த பாடமாகவே காணப்படுகிறது. தவறாக புரிந்துக்கொண்ட சகோதரர்கள் தன்னை புரிந்துக்கொள்ளும் நாள் வரையிலும் கோபத்தை உமிழாது, வெறுப்பை வளர்க்காது, பகைமையை கொள்ளாது எல்லா நிந்தைகளையும் அவமானங்களையும் தாங்கிக் கொள்வோமெனில் சகோதர சிநேகம் மலர்ந்தே தீரும்.
கிறிஸ்துவின் கற்பனை வார்த்தைகள் கொண்டது மட்டுமல்ல, வாழ்க்கையும் கொண்டதாகும். அவர் எதை சொன்னாரோ அதை தன் வாழ்க்கை பாடத்திலிருந்து தான் அறிவித்துள்ளார். தன் பிதா போதித்தவைகளையும், தன் உலக வாழ்க்கையில் பட்ட அனுபவங்களிலிருந்தும் சீஷர்களுக்கு போதித்தார். ஆகையினால் சீஷர்களானாலும் சரி பின்னடியார்களானாலும் சரி யாவரும் கிறிஸ்துவைபோல மாறி தானாக வேண்டும்.
ஒருவரிலொருவர் அன்புகூருவதை விடவும் வாழ்க்கை அனுபவங்களில் சகோதரர்களிடத்தில் அன்புகூருவது மிக கடினம் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். தனக்கு வலிப்பதுபோல் தன் இரத்தம் கொண்டவனுக்கும் வலி உண்டு என்பதை மறந்துப்போகலாகாது. தனக்கு தேவையுள்ளதுபோலவே தன் சக உதிரத்துக்கும் தேவை உண்டு என்பதை மறந்துவிடலாகாது. எல்லா நன்மைகளுக்கும் இந்த அறிவே சிறந்ததாகும். தன்னை குறித்து தன் சகோதரனுக்கு சிந்தையில் உண்டாகும் காயம் தனக்கு மிகுந்த வலியை உண்டுபண்ணும் என்பதை மறவாதிருப்போமாக.
கிறிஸ்துவை நம்பும் நான் அவரின் கட்டளையை விட்டுவிட்டு கிறிஸ்துவை மட்டுமே நான் சுமக்கவியலாது. கிறிஸ்துவை சுமப்பதை விடவும் அவரது கட்டளையை சுமப்பது மிகப்பெரிய பாரம் ஆகும். ஆனாலும் கிறிஸ்துவோடு சேர்த்து கட்டளையை சுமப்பதுவே மிகவும் எளிதாகும்.
பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:21,22..
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்காருவர் மன்னியுங்கள். எபேசியர் 4:30-32..