மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள்

மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள்

A little while, and you will not see Me; and again you will see Me, because I go to the Father. (John 16:16)

John 16:5,10,28; John 13:3,33; John 7:33; John 12:35; John 14:19; John 17:13; Mark 16:19; Act 10:40,41; Hebrew 12:2.

நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். (யோவான் 16:16)

யோவான் 16:5,10,28; யோவான் 13:3,33; யோவான் 7:33; யோவான் 12:35; யோவான் 14:19; யோவான் 17:1; மாற்கு 16:19; அப்போஸ்தலர் 10:40,41; எபிரெயர் 12:2.

என்னைக் காண்பீர்கள்:

கர்த்தராகிய இயேசுவைக் குறித்து சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களின்படி இயேசுகிறிஸ்து மனிதனாக இந்த பூமியில் வந்தார். தமது இரட்சண்ய கிரியைகளை செய்து முடித்தவராய் பரலோகத்துக்கு – தாம் வந்த இடத்திற்கு திரும்பவும் செல்ல இருக்கிறார். ஆகையினால்தான் என்னைக் காணமாட்டீர்கள் என்று கூறுகின்றார். இந்த வருகையை இயேசுவின் முதலாம் வருகை என்று கூறுகின்றது.

மற்படியும் என்னைக் காண்பீர்கள் என்பதினால் இயேசுகிறிஸ்து மறுபடியும் வரப்போகின்றார் என்பது உண்மையாகின்றது. ஆம். இயேசுகிறிஸ்து வரப்போகின்றார். அவருடைய வருகையை இருவிதங்களில் இங்கு குறிப்பிடுகின்றேன்.

ஒன்று, மீட்கப்பட்ட புறஜாதி திருச்சபையை – விசுவாசமக்களை எடுத்துக்கொள்வதற்காக இயேசுகிறிஸ்து மேகமீதில் வரப்போகின்றார். இதனை இரகசிய வருகை என்கின்றோம். மணவாளனாக வந்து மணவாட்டியை பெற்றுக்கொள்கின்றார். மணவாட்டியை பரதீசாகிய தமது வீட்டில் கொண்டுபோய் சேர்க்கின்றார். இந்த வருகையை பூமியில் உள்ள ஒருவரும் காணமாட்டார்கள். எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு உரியவர்கள் மட்டுமே அவரைக் காண்பர்.

இன்னொன்று, இரகசிய வருகைக்கு பின்பு 7 வருடங்கள் தாண்டி இயேசுகிறிஸ்து இராஜாவாக எருசலேமில் – இந்த பூமியில் வருவார். வந்து அந்திகிறிஸ்துவையும், கள்ள தீர்க்கதரிசியையும் பிடித்து நரகத்திலே தள்ளவும், வலுசர்ப்பத்தை பிடித்து பாதாளத்தில் தள்ளி 1000 வருடம் அடைத்து வைக்கவும் கட்டளையிடுவார். அதன் பின்பு எருசலேமில் இருந்து கொண்டு பூமி முழுவதையும் அரசாளுவார். இந்த வெளிப்படையான ராஜரீக வருகையை பூமியில் உள்ளோர் – குறிப்பாக இஸ்ராயேலர் அனைவரும் காண்பர்.

இதனைதான் இயேசுகிறிஸ்து இவ்விடத்தில் கூறுகின்றார். ஆம், நாம் இயேசுவின் வருகையை கண்டு அவரோடு செல்லும் மக்களாக இருக்க வேண்டும். கைவிடப்பட்டு போகும் கன்னிகைகளாக இருக்கலாகாது. சேர்த்துக் கொள்ளப்படும் கன்னிகைகளாக இருக்க வேண்டும். புறஜாதி மக்களாகிய நமக்கு வைக்கப்பட்டுள்ள ஆனந்த பாக்கியத்தை இழக்காமல் இலக்கை நோக்கி தொடருவோம்.

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆவியை அவித்துப்போடாதிருங்கள். தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1தெசலோனிக்கேயர் 5:16-23.

ADD YOUR COMMENT

Powered By Indic IME