நான் அவரை அறிந்து அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.
I do know Him and keep His word. (John 8:55)
Jn1:18; Jn6:46; Jn7:29; Jn10:15; Mt11:27; Lk10:22; Jn6:60; 1Jn1:1-10.
ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன், அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன், அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன். (யோவான் 8:55)
யோவான் 1:18; யோவான் 6:46; யோவான் 7:29; யோவான் 10:15; மத்தேயு 11:27; லூக்கா 10:22; யோவான் 6:60; 1யோவான் 1:1-10.
அறிதலும் கைக்கொள்ளுதலும்.
இது ஆராய்ந்து – பரீட்சித்து பார்த்து அறிந்துகொள்வதல்ல, நெருங்கி பழகி, இணைந்து வாழ்ந்து அறிந்து கொள்வதாகும்.
இயேசுகிறிஸ்து பிதாவை அறிந்தது பூமியில் நடந்த ஒரு நிகழ்வினாலல்ல, தேவனிடமிருந்து, தேவனோடிருந்து அவரை நன்றாய் அறிந்து அவரின் வார்த்தைகளைக் கைக்கொண்டுள்ளார்.
நாமும் இயேசுகிறிதுவை அறிகிற அறிவில் வளர்ந்திருக்க அழைக்கப்பட்டுள்ளோம். அவருடைய வார்த்தைகளை ஏற்றுகொண்டு வாழவேண்டுமெனில் அவரை இன்னாரென்று அறிந்திருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவின் பரிசுத்தம், நீதி, பற்றுணர்வு, கீழ்படிதல், ஆற்றல் குறித்த அறிவில்லாமல் அவரின் வசனத்தை செயல்படுத்தவியலாது.
ஒருவரை இன்னாரென்று அறியாமல் அவரின் வார்த்தைகளை பின்பற்றுவது எளிதானதல்ல. போதகனை பாராதே, போதகத்தை பார் என்பதையும் ஏற்கமுடியாது. போதகரை அறிகிற அறிவுதான் அவருடைய வார்த்தையில் உள்ள சாரத்தை புரியவைக்கும். அதுபோலவே இயேசுவையும், அவரின் இரட்சண்ய கிரியைகளையும் அறிகிற அறிவே அவரின் போதனைகளை பின்பற்றுவதற்கு அடித்தளமாகும்.
நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவின் அழுத்தத்தை போறுத்தே அவரின் வசனத்தின் பெருக்கத்தை அறிய இயலும்.
இயேசுவை அறியாமல் அவர் வசனத்தை கைக்கொள்ள இயலாது. அவரை அறிகிற அறிவில் வளர வளர அவருக்கு கீழ்படிதல் உண்டாகும். அந்த கீழ்படிதலே நம்மை மேன்மைபடுத்தும்.
கர்த்தாவே உம் குமாரனை பின்பற்றி அவர் வாக்கியங்களைக் கைக்கொண்டு வாழும் படியாகவே அவரை இரட்சகராகவும், மீட்பராகவும் அனுப்பினீர். இதை உணர்ந்துகொண்டு உத்தமமாய் வாழ எங்களுக்கு உதவிடும்.