பேதுரு: என் கால்கள் மட்டுமல்ல, என்கைகளையும் என் தலையையும்கூடக் கழுவ வேண்டும்.
Simon Peter said,Lord, not my feet only, but also my hands and my head. (John 13:9)
Psalms 26:4-8; Psalms 51:2,7; Jeremiah 4:14; Matthew 27:24; Acts 22:16; Hebrews 10:22; 1Peter 3:21; Leviticus 10:3; Leviticus20:7.
அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என்கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான். (யோவான் 13:9)
சங்கீதம் 26:4-8; சங்கீதம் 51:2,7; எரேமியா 4:14; மத்தேயு 27:24; அப்போஸ்தலர் 22:16; எபிரெயர் 10:22; 1பேதுரு 3:21; லேவியராகமம் 10:3; லேவியராகமம் 20:7.
நான் கழுவப்பட வேண்டும்:
பிள்ளைகள் பெற்றோரால் கழுவப்படுகிறார்கள். நோயாளிகள் மருத்துவ தாதிமார்களால் கழுவப்படுகிறார்கள். சேற்றில் வீழ்ந்தவன், சரீரத்தில் அழுக்குப்பட்டவன் தன்னைதானே கழுவிக்கொள்கிறான். கழுவபடுதல் என்பது தூய்மையாக்கப்படுதல் என்றும், வெண்மையாக்கப்படுதல் என்றும் பொருளாகின்றது.
என்னிடத்தில் உனக்கு பங்கில்லை என்று சொன்ன இயேசுவிடம் தன்தலை, கைகள் கால்கள் யாவையும் கழுவ வேண்டும் என்றுக் கேட்கிறான். இது வேடிக்கைக்காகவோ, கோபத்தினிமித்தமாகவோ கூறப்பட்ட வார்த்தையல்ல, உள்ளத்தில் தைக்கப்பட்டவனாய், நான் எப்பொழுதும் இயேசுவோடு இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவனாய் இவ்வாறு கூறினான்.
நம் சரீரத்தை சுத்திகரிக்க எவ்வளவு நேரம் செலவு செய்கிறோமோ, நம் சரீரத்தை அலங்கரிக்க எவ்வளவு நேரம் செலவு செய்கிறோமோ அவ்வளவாய், அதைவிடவும் அதிகமாய் நம் ஆன்மாவை சுத்திகரிக்கவும், அலங்கரிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். நான் என் தேவனாலும், அவரது ஆவியினாலும், அவரது வசனத்தினாலும் எப்பொழுதும் கழுவபட வேண்டும் என்ற வாஞ்சை உடையவராய் இருக்க வேண்டும். என்னை நான் கழுவிக்கொள்வதும் அவசியமே. கழுவபடுதலாகிய சுத்திகரிக்கப்படுதல் இல்லாமல் நாம் தேவனை நெருங்க முடியாது. தேவனை நெருங்க இயலாமல் தேவ சத்தம் அறிய முடியாது. தேவ சத்தம் அறியாமல் தேவ சித்தம் செய்ய இயலாது. தேவ சித்தம் செய்யாமல் ஜெயிக்க முடியாது. சாத்தானையும், மாம்சத்தையும், உலகத்தையும், பாவத்தையும் ஜெயிக்க நம்மில் அனுதின கழுவபடுதல் அவசியமாகிறது. தவறிழைத்ததினிமித்தம் தினமும் கழுவபடும் முறையல்ல, தவறிழைக்காமலே மகிமைபடுதலுக்குள் பிரவேசிப்பது வரையிலும் கழுவபடுதலுக்குள் கடந்துச் செல்வதே அவசியமாயிருக்கிறது.
நல்மனசாட்சியில் தெய்வீக தெளிவும், குற்றம் குறை கொண்டிராத தன்மையும், அதனைபற்றியவைகளை எப்பொழுதும் ஆராய்வதுமான பார்வையும் கொண்டிருக்க வேண்டும்.
இதுவே நல்மனசாட்சி.
துர்மனசாட்சி நீக்கப்படுதலே நல்மனசாட்சி.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. எபேசியர் 1:3-7.