கேளுங்கள் உங்கள் சந்தோஷம் நிறைவடையும்படி பெறுவீர்கள்.
Until now you have asked nothing in My name. Ask, and you will receive, that your joy may be full. (John 16:24)
John 15:11; 1John 1:3,4; 2John 1:12; John 3:29; Philippians 1:25,26.
இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை, கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். (யோவான் 16:24)
யோவான் 15:11; 1யோவான் 1:13,14; 2 யோவான் 1:12; யோவான் 3:29; பிலிப்பியர் 1:25,26.
நிறைவான சந்தோஷம்:
இயேசுகிறிஸ்துவை தனது ஆத்தும மீட்பராக ஏற்றுக்கொள்கிறவர்கள் யாவரும் இயேசுவின் நிறைவான சந்தோஷத்துக்குரியவர்களே. ஆனால் தம்மை நோக்கி கூப்பிடும் பக்தர்களுக்கு செவிகொடுத்து அவர்களுக்கு நன்மைகளை அருளிசெய்து சந்தோஷப்பட வைப்பது அவருக்கு பிரியமானது. நாம் கேட்பதை அவர் நமக்கு தருவதற்கு காரணம் நாம் நிறைவான சந்தோஷமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்பதே. இதனால் கேட்பது கிடைக்காதவர்களுக்கு சந்தோஷம் கொடுப்பதில்லை என்று பொருளாவதில்லை. அவர்களுக்கு சற்று தாமதம் செய்கின்றார் என்றே புரிந்து கொள்ள வேண்டும். அவரது தாமதம் அவர்களது பொறுமையை விளங்க செய்வதினால் அவர்கள் பரிபூரண சந்தோஷமடைய கொடுத்து ஆசீர்வதிக்கிறார்.
தூரத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்தவனுக்கு குளிர்ந்த நீரைப் போலிருக்கும் (நீதிமொழிகள் 25:25) என்பது நீதிமொழிகள். பரலோகத்திலிருக்கும் தேவனிடமிருந்து வரக்கூடிய பிரதியுத்தரம் நற்செய்தியாகும். ஏன் நாம் அதை நற்செய்தி என்கிறோம்? அது மனதுக்குள்ளும், சிந்தைக்குள்ளும் இன்பம் போலிருக்கும். பரிபூரண சந்தோஷமாயிருக்கும். எனவேதான் நீதிமொழிகள் 15:30 ல் நற்செய்தி எலும்புகளை புஷ்டியாக்கும் என்று கூறுகின்றார் சாலொமோன்.
தேவனுடைய கிருபையும், கிரியைகளும் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய அருங்கொடையாயிருக்கின்றது. அவர் கொடுக்கின்ற யாவுமே நம்மை உருவாக்குகின்றது. புதுப்பிக்கின்றது, ஊன்ற கட்டுகின்றது. உடைந்த மனங்களை செப்பனிடுகின்றது. எல்லாரும் என்னை தள்ளிவிட்டாலும் என் விண்ணப்பம் கேட்கிறவர் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு உண்டாகின்றது. அதனால் அவர்மேல் நம்பிக்கையும், வாஞ்சையும், தவனமும் உண்டாகின்றது. நம்பிக்கை துளிர்க்கின்றது.
அவர் நமக்கு கொடுப்பதினால் நாம் அடையும் சந்தோஷத்தை அவர் கண்டு அவரும் ஆனந்தமடைகின்றார். இந்த இருபக்க மகிழ்ச்சியின் நிலைத்திருத்தலே தேவன் சபையில் கிரியை செய்வதற்கான ஏதுவாகும். நமக்குள் அவர் உண்டாக்கிய மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் நாம் இழந்து விடாமல் தொடர்ந்து தெய்வபயத்திலும், கீழ்படிதலிலும் வளர்வோமாக.
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:3-7.