குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்

குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.

Took branches of palm trees and went out to meet Him. (John 12:13)

Lev23:40; Neh8:15; Mt25:1,6; Lk9:37; Jn12:18; Act10:25; Act28:15; 1Thes4:17; Heb7:9; Rev7:9; Ps21:3.

குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். (யோவான் 12:13)

லேவியராகமம் 23:40; நெகேமியா 8:15; மத்தேயு 25:1,6; லூக்கா 9:37; யோவான் 12:18; அப்போஸ்தலர் 10:25; அப்போஸ்தலர் 28:15; 1தெசலோனிக்கேயர் 4:17; எபிரெயர் 7:9; வெளி 7:9; சங்கீதம் 21:3

எதிர்கொண்டு போனார்கள்:
லாசருவை காணும்படியாக வந்த கூட்டம் இயேசுவோடு இணைந்துகொண்டது. இந்த கூட்டத்தோடு இயேசுகிறிஸ்து பெத்தானியாவிலிருந்து கழுதையின்மேல் ஏறி எருசலேம் நோக்கி பயணிக்கின்றார். இயேசு எருசலேமில் பண்டிகை கொண்டாட வருகிறார் என்று கேள்விபட்ட பண்டிகை யூதர்கள் பெத்தானியாவிலிருந்து பெரும்கூட்டத்தோடு வரும் இயேசுவை வரவேற்கும்படியாக குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு எதிர்கொண்டு போனார்கள்.
இப்பகுதியில் 5 காரியங்கள் நடக்கின்றது.

  • இயேசுவுக்கு எதிர்கொண்டுபோக காரணம் இயேசு பண்டிகைக்கு வருகிறார் என்பதாகும்.
  • எவரின் தூண்டுதலின் பேரில் அல்லாது பெரும்கூட்டம் இயேசுவை நோக்கி புறப்பட்டு சென்றது.
  • எதிர்கொண்டுபோக பயன்படுத்திய உபகரணங்கள் குருத்தோலைகளும், மேலாடைகளும், மரக்கிளைகளும் ஆகும்.
  • எதிர்கொண்டு போனோர் இயேசுவை கழுதையின்மேல் ஏற்றி ராஜாவாக சித்தரித்தது.
  • எதிர்கொண்டு போனோர் பயன்படுத்திய வாசகம் ஓசன்னா என்பதாகும்.
    இவற்றில் ஒருசிலவற்றை இன்று தியானிக்கலாம்.
    குருத்தோலைகள் என்பது பேரீச்ச மரத்தின் குருத்துகள் ஆகும். அதாவது புதிதாக முளைத்த பேரீச்ச மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு அதை பிடித்துக் கொண்டவர்களாய் எதிர்கொண்டு போயினர். பெத்தானியா பேரீச்ச மரங்களின் வீடு என்பதினால் இவ்வாறு பேரீச்ச குருத்துகளை பயன்படுத்தினர். குருத்தோலைகளை பிடித்துகொண்டு மேசியா இராஜாவை வரவேற்க எதிர்கொண்டுபோகும் செயல் மகிழ்ச்சியையும், வெற்றியையும் குறிக்கின்றது.
    இயேசு இராஜாவாக மேகமீதில் வரப்போகிறார். பெரும் ஆரவாரத்தோடு வரப்போகிறார். வரப்போகிற அவரை வரவேற்க அவருக்கு எதிர்கொண்டு போகிற கூட்டமாகிய இரட்சிப்பின் மக்களும் மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும் அடையாளமாகிய குருத்தோலைகளை பிடித்துக்கொண்டு செல்வர் என்பது வெளிப்படுத்தலில் காட்டப்பட்டுள்ள காட்சியாகும்.
    இயேசுவை வெறுப்போரும், நிராகரிப்போரும் உள்ள நம் பகுதியில் இராஜாவாக வரப்போகிறவரை எதிர்கொண்டுபோக எப்படிபட்ட ஆயத்தம் உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை சிந்தித்து பார்ப்போமா.
    அவர் வரப்போகிறார். நீர் ஆயத்தமா?
    இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். யாக்கோபு5:7,8,9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME