குமாரனைக் கனம்பண்ணாதவன் பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
He who does not honor the Son does not honor the Father who sent Him. (John 5:23)
Jn14:1; Jn15:23,24; Jn16:14,15; Jn17:10; Mt11:27; Ro8:9; 1Jn2:23; 2Jn1:9.
குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். (யோவான் 5:23)
யோவான் 14:1; யோவான் 15:23,24; யோவான் 16:14,15; யோவான் 17:10; மத்தேயு 11:27; ரோமர் 8:9; 1யோவான் 2:23; 2 யோவான் 1:9.
குமாரனை கனம்பண்ணாதிருத்தல்:
இஸ்ராயேலர்கள் பிதாவை பின்பற்றினார்கள். பிதாவினால் அனுப்பபட்ட இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் போனார்கள். இவ்விதம் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும் அவரை கனம்பண்ணாமலும் போனதற்கு காரணங்கள் உண்டு.
1. அவருடைய வித்து அவர்களுக்குள் இல்லை. 1யோவான் 3:9.
2. அவருடைய ஆவியை அவர்கள் கொண்டிருக்கவில்லை. மத்தேயு 12:28; யோவான் 14:17.
3. அவர்களுக்குள் ஒளி இல்லை. இருள் குடிகொண்டு அவர்கள் இருதயம் குருடாகியது. யோவான் 12:40.
4. நியாயபிரமாணத்தை பெற்றிருந்தும் தேவனின் வார்த்தையை இருதயத்தில் கொண்டிருக்கவில்லை. யோவான் 14:24.
5. விசுவாசத்தை இழந்துபோனார்கள். யோவான் 3:12; யோவான் 4:48.
6. தேவன் அவர்களை மனகடினத்துக்கு ஒப்புக்கொடுத்தார். ரோமர் 11:25.
7. தேவன் தமது கிருபையை புறஜாதியார்மேல் திருப்பினார். ரோமர் 9:18
இயேசுகிறிஸ்துவை கனம்பண்ணுவதே பிதாவாகிய தேவனை கனம் பண்ணுவதாகும்.
ஏனெனில்,
1. இயேசுவே பிதாவினால் அனுப்பபட்ட ஒரே இரட்சகர்.
2. இயேசுவும் பிதாவும் ஒன்றாயிருக்கிறார்கள்.
3. இயேசு மட்டுமே பிதாவினிடம் ஏறிச்சென்று அவரின் மடியிலிருக்கிறார்.
4. அவர் மட்டுமே தம்முடையவர்களுக்காக பிதாவிடம் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார்.
5. இயேசு மட்டுமே மறுபடியும் உலகிற்கு பிதாவினால் அனுப்பப்படப்போகிறார்.
இயேசுகிறிஸ்துவின் வரலாற்று நிகழ்வுகளை நாம் காணாவிட்டாலும் ஆவியால் முத்திரிக்கப்பட்ட விவிலியம் எடுத்துகூறும் இயேசுவை நாம் கனம்பண்ண – மகிமைப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.
கர்த்தாவே நீர் உமது குமாரனை எங்களுக்காக தந்தீர். நாங்கள் முழு இருதயத்தோடும் ஏற்றுகொண்டு அவரையும், அவரது வார்த்தைகளையும், கிரியைகளையும் நம்பி அவரை எல்லா நாமங்களுக்கும் மேலாக மகிமைபடுத்தி வாழ எங்களுக்கு கிருபை செய்தருளும்.