அடிமையல்ல, குமாரனே என்றைக்கும் வீட்டிலே நிலைத்திருக்கிறார்

அடிமையல்ல, குமாரனே என்றைக்கும் வீட்டிலே நிலைத்திருக்கிறார்.

slave does not abide in the house forever, but a son abides forever. (John 8:35)

Jn14:19,20; Mt21:41-43; Ro8:15-17,29,30; Gal4:4-7,30,31; Col3:3; Heb3:5,6; 1Pet1:4,5; Ps1:5.

அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான், குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (யோவான் 8:35) 

யோவான் 14:19,20; மத்தேயு 21:41-43; ரோமர் 8:15-17,29,30; கலாத்தியர் 4:4-7,30,31; கொலோசெயர் 3:3; எபிரெயர் 3:5,6; 1பேதுரு 1:4,5; சங்கீதம் 1:5.

வீட்டில் நிலைத்திருப்பவர் யார்?
   அடிமைத்தன நுகத்துக்குட்படுத்தபட்டவன் வீட்டில் நிலைத்திருக்கவியலாது. இடபெயர்ச்சிகள் உண்டாகும். ஆனால் வீட்டுக்குரிய குமாரனாக பிறந்தவர் எவரோ அவர் அந்த வீட்டிலே நிலைத்திருக்கமுடியும்.

   இப்பகுதியில் யூதர்களையும், தன்னையும் குறித்து பேசுகிறார். யூதர்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருப்பதினால் தேவனுடைய புத்திரர்களாக இருக்க இயலாது. தேவனுடைய பிள்ளைகளாக இராததினால் தேவனுடைய காணியாட்சிக்குள்ளும் தேவனுடைய வீட்டுக்குள்ளும் பங்கு இல்லாதவர்களாகின்றனர். குமாரனாகிய நானே பிதாவிடமிருந்து அனுப்பப்பட்டு பிதாவின் விருப்பத்தை செய்கிறபடியினால் பிதாவின் வீட்டில் நிலைத்திருக்கிறேன்.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையும் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்று தேவனுடைய பிள்ளைகளானவர்கள் மட்டுமே நிலைத்திருக்க இயலும். பாவத்திலும் சபையிலுமாக வாழவியலாது.

   தேவனுடைய இராஜ்ஜியத்துக்குள்ளும் குமாரனின் இரத்தத்தினாலும், தேவனுடைய ஆவியினாலும் மறுபடி பிறந்து தேவனுடைய பிள்ளைகளானவர்கள் மட்டுமே நுழைய இயலும். பாவத்திலும், மாம்ச சுபாவத்திலும், இச்சைகளிலும், உலக ஐசுவரியத்திலும், ஆடம்பரத்திலும் வாழ்ந்துகொண்டு தேவனுடைய இராஜ்ஜியத்துக்குள் நுழைய இயலாது.

   சங்கீதம் 23:6 ல் யார் கர்த்தருடைய வீட்டில் நிலைத்திருக்கிறான் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சங்கீதம் 24:3-6,15 ஐயும் காண்க.
கிறிஸ்துவில் நிலைத்திருப்பவனே தேவனுடைய வீட்டிலும் நிலைத்திருப்பான். பரலோக வீட்டுக்கு பாத்தியதையானவனே தேவ சபையில் நிலைத்திருப்பான்.

   கர்த்தாவே உம் மகன் உம் வீட்டில் நிலைத்து நின்று உம் விருப்பம் நிறைவேற்றியதுபோல நாங்களும் உம் வீட்டில் நிலைத்து நிற்க பெலன் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME