நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்து அறிந்துள்ளோம்.
we have come to believe and know that You are the Christ,the Son of the living God. (John 6:69)
Jn1:29,41,45,49; Jn11:27; Jn20:28,31; Mt16:16-18; Mk1:1; Mk8:29; Lk9:20; Act8:37; 1Jn5:1,20.
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். (யோவான் 6:69)
யோவான் 1:29,41,45,49; யோவான் 11:27; யோவான் 20:28,31; மத்தேயு 16:16-18; மாற்கு 1:1;8:29; லூக்கா 9:20; அப்போஸ்தலர் 8:37; 1யோவான் 5:1,20.
கிறிஸ்து எபிரேயத்தில் மேசியா, கிரேக்கத்தில் கிறிஸ்து,
தமிழில் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள்.
இயேசு என்ற பெயர் கொண்ட யூதனாகிய கிறிஸ்து என்ற மேசியா என்று விசுவாசித்தும், அறிந்தும் இருப்பதாக பேதுரு கூறுகின்றார்.
மேசியா வருகையை எதிர்பார்த்து காத்திருந்த யூதர்களுக்கு இயேசுவே மேசியா என்ற தொனி அவ்வளவாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. அக்வர்களின் இராஜரீக எதிர்பார்ப்புக்கு மாறாக இயேசு ஒரு பணியாளாக வந்ததினால் இவ்வித தடுமாற்றம்.
ஆனால் பேதுருவோ இயேசுவே யூதர்கள் எதிர்பார்த்துள்ள மேசியா என்று தனது விசுவாசத்தை வெளிபடுத்துகிறார்.
இயேசுவே ஆண்டவர்,
இயேசுவே இரட்சகர்,
இயேசுவே தேவன்,
இயேசுவே வரப்போகிறவர் என்று நமது விசுவாசத்தை அறிக்கை செய்து வெளிபடுத்த வேண்டிய கால யுகத்தில் நாம் இருக்கிறோம்.
தேவனுக்கு மகனா?
உலகிற்கு மீட்பரா?
தேவகுமாரனுக்கு பிறப்பு கொண்டாட்டமா?
இறப்பு உண்டா?
உயிர்ப்பு உண்டா? என்று எண்ணி நகையாடும் இவ்வுலகில் ஆம் அவர் தேவகுமாரன், மனிதகுமாரன், உலக இரட்சகர் என்று உரக்க சொல்ல வேண்டிய இடத்தில் நாம் உள்ளோம்.
விசுவாசிப்பதும், அனுபவபூர்வமாக அறிந்திருப்பதும் நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு அடையாளமே.
கர்த்தாவே, உமது குமாரனை இன்னார் என்று அறிக்கையிடவே எங்களை மீட்டெடுத்தீர். அறிக்கையுடன் கூடிய மெய்வாழ்வில் நாங்கள் இணைந்து நிற்க உதவிடும்.