கிறிஸ்து வரும்போது, அற்புதங்கள் அதிகம் செய்வாரோ?
When the Christ comes,will He do more signs than these which this Man has done? (John 7:31)
Mt11:3-6; Mt12:22,23; Mk2:11,12; Lk8:13; Jn2:23,24; Jn3:2; Jn4:39; Jn6:2,14,15; Jn8:30-32; Jn9:16; Jn10:25,41,42; Jn12:42; Act2:22; Act8:13; Jas2:26.
ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள். (யோவான் 7:31)
மத்தேயு 11:3-6;மத்தேயு 12:22,23; மாற்கு 2:11,12; லூக்கா 8:13; யோவான் 2:23,24; யோவான் 3:2; யோவான் 4:39; யோவான் 6:2,14,15; யோவான் 8:30-32; யோவான் 9:16; யோவான் 10:25,41,42; யோவான் 12:42; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 8:13; யாக்கோபு 2:26.
அற்புதங்கள் செய்வாரோ?
இவ்வசனத்தில் ஜனங்கள் இயேசுவை விசுவாசித்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த விசுவாசம் எத்தகையது என்பதை நாம் கவனிக்கும்போது இயேசுவை கிறிஸ்து என்று நம்பவில்லை, கிறிஸ்துவாகிய இன்னொருவர் வருவார், அவர் வந்து இதைவிடவும்பெரிய அற்புதங்கள் செய்வார் என்று வியாக்கியானபடுத்துகின்றனர் என்பதை அறிகிறோம்.
வரப்போகிற மேசியாவாகிய கிறிஸ்து பெரிய அற்புதங்களை செய்வார் என்று நம்புவதில் தவறில்லை. ஆனால் அத்தகைய அற்புதங்கள் தானே இப்பொழுது இயேசுவால் நடப்பிக்கபடுகிறது என்று யூகிக்க இயலவில்லை. இயேசுவே மேசியாவாகிய கிறிஸ்து என்று நம்ப இயலாதவர்களாயும் உள்ளனர்.
அந்தோ பரிதாபம்.
காந்தியடிகள் போன்றவர்கள் இயேசுவை மேலானவராக, நல்ல ஒழுக்க சீலராக, நல்ல போதகராக கண்டனர். சாட்சியம் கூறினர்.
ஆனால் உலகில் உள்ள எல்லா சமயங்களில் காணப்படுகிறவைகளை விடவும் ஆத்தும ஈடேற்றத்துக்கான – மெய் வாழ்வுக்கான உபதேசம் உடையவரே இயேசு என்றோ, இயேசுவின் மரணம், உயிர்ப்பு மட்டுமே தன் பாவங்கள் மன்னிக்கபட காரணமாயுள்ளது என்று நம்பவோ இயலவில்லை.
அந்தோ பரிதாபம்.
யோவான் 3 ல் உள்ள நிக்கோதேமுவும் அப்படியே.
கிறிஸ்துவை மதஸ்தாபகராக பார்க்கும் RSS போன்ற மத வைராக்கியவாதிகள் இயேசுவை இரட்சகராக , மீட்பராக, வீடுபேறடைய செய்பவராக காணாதிருப்பது பரிதாபம்.
இயேசுவில் மீட்பை காணாது வேறு காரியங்களுக்காக பின்பற்றும் எவருடைய வாழ்க்கையும் பரிதாபத்தில் போய்தான் முடியும் என்பதில் நான் உறுதியாயிருக்கின்றேன்.
கர்த்தாவே, உம் குமாரனின் மகத்துவங்களை காணக்கூடாதபடிக்கு மனுக்குலம் குருடாக்கப்பட்டுள்ள தன்மையிலிருந்து உம் இரக்கத்தினால் விடுதலை செய்தருளும்படி வேண்டி கொள்கிறோம்.