கிறிஸ்துவின் பிறப்பு.
கிறிஸ்துவின் பிறப்பு.
ஏசாயா 7:10-25. யோவான் 1:11-18. வெளி 1:12-18.
பிறப்பு ஒரு அதிசயம். ஆண், பெண் சேர்க்கையில் உண்டாகும் மகத்துவம்.
அதிலும் மனித பிறப்பு அற்புதமானது.
அதிலும் தேவகுமாரனின் பிறப்பு அதிசயமானது, புரிந்துக்கொள்ள இயலாத புதிர்.
ஆகவே, அவர் அதிசயமானவர்.
அது மகிமை நிறைந்ததால் அவர் மகிமையானவர்.
ஜென்ம சுபாவத்தின் பிறப்பல்ல. தெய்வ சுபாவத்தின் பிறப்பு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் இந்த திரு நாளில் அவர் குறித்த மூன்று காலங்கள் சார்ந்த மூன்று காரியங்களை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
1.பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து அடையாளமாக காட்டப்பட்டுள்ளார். ஏசாயா 7:10.
கன்னிகை கர்ப்பவதியாகுதல் ஒரு அடையாளம். இது ஆண்டவர் கொடுத்த அடையாளம்.இது இஸ்ராயேலருக்கு கொடுக்கப்பட்ட அடையாளம்.
விழுவதற்கும், எழுவதற்கும் இயேசு கிறிஸ்து அடையாளமாயிருக்கிறார். லூக்கா 2:34.
மேலும் இந்த சந்ததிக்கும் அடையாளமாயிருக்கிறார். லூக்கா 11:30.
இதனால்தான் எபிரேயர் 2:4 ல் அடையாளங்களினால் உறுதிபடுத்தப்பட்ட இரட்சிப்பு என்கிறார்.
ஆம். இரட்சிப்பின் அடையாளம் அவரே. மீட்பின் அடையாளமும் அவரே.
யார் இரட்சிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு அவர் அடையாளமாயிருக்கிறார்.
2.புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து அவதாரமாக காட்டப்பட்டுள்ளார். யோவான் 1:11-18.
வார்த்தை, ஜீவன், ஒளியாயிருந்தவர் இயேசு என்ற மனித அவதாரமானார். இதனால்தான் அவரை மனுஷகுமாரன் என்று கூறுகிறது விவிலியம். மனுஷகுமாரன் என்றால் மனிதனிடம் வந்து பிறந்தவர் என்று பொருள்.
இவர் தேவனால் நியமிக்கப்பட்ட மனுஷன். அப்போஸ்தலர் 17:31.
மீட்கும் பொருளாக வந்த மனுஷகுமாரன் இவரே. 1தீமோத்தேயு 2:6.
இது மாறிப்போகிறதும், மறைந்து போகிறதுமான அவதாரமால்ல.
நம்மோடு வாழ வந்த அவதாரம்.
தம்மோடு நம்மை வாழ்வைக்கும் அவதாரம்.
3.இப்பொழுது இயேசு கிறிஸ்து அரசராக அறியப்பட்டுள்ளார். ஏசாயா 6:1-4; தானியேல் 7:13-18; வெளிப்படுத்தல் 1:12-18.
அடையாளமாக வந்த இயேசு. மனுஷனாக வந்த இயேசு அரசராக வரப்போகிறார்.
வானத்தின் மேகங்கள் மேல் வரப்போகிறார். தானியேல் 7:13, மத்தேயு 24:30. மேகத்தில் ஏறிப்போனவர் மேகத்தில் வருவார்.
வெள்ளை குதிரையின்மேல் ஏறி வருவார். வெளி 19:11.
சிங்காசனத்தில் வீற்றிருப்பவராக வருவார். நியாந்தீர்க்க, ஆளுகை செய்யும்படியாக வருவார். லூக்கா 1:32, எபிரெயர் 1:8, வெளி 3:21.
இவர் பூமியின் இராஜாக்களுக்கு அதிபதியாக வருவார். வெளி 1:5, 1தீமோத்தேயு 6:15; வெளி 19:16.
ஆம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மகா அதிசயம்.
இந்த அதிசய நாளில் நாமும் அதிசய பிறவிகளாக இருப்பதை உணர்ந்து கிறிஸ்துவுக்காய் வாழுவோமாக. ஆமென்.