என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்

என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

Believe Me for the sake of the works themselves. (John 14:11)

John 5:36; John 10:25,32,38; John 12:38-40; Matthew 11:4,5; Luke 7:21-23; Act 2:22; Hebrews 2:4.

நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:11)

யோவான் 5:36; யோவான் 10:25,32,38; யோவான் 12:38-40; மத்தேயு 11:4,5; லூக்கா 7:21-23; அப்போஸ்தலர் 2:22; எபிரெயர் 2:4.

நம்பவைக்கும் கிரியைகள்:
இயேசுகிறிஸ்துவின் கிரியைகள் அவரை நம்பவைப்பதற்காகவும், அவரோடு பிதா இருக்கிறார் என்று காண்பிப்பதற்காகவும் செய்யபட்டவைகளே. அவருடைய கிரியைகள் மாய்மாலமானவைகளல்ல, பொய்யானவைகளுமல்ல. சுவிசேஷங்களிலுள்ள அவரது கிரியைகளை அற்புத கிரியைகள், நற்கிரியைகள், இரட்சண்ய கிரியைகள் என மூன்று பகுதியாக பிரித்து அறிந்துக் கொள்ளலாம்.

அவரின் அற்புத கிரியைகள் அவர் தேவகுமாரன் என்றும், தேவனிடமிருந்து வந்தவர் என்றும் வெளிபடுத்தியது. மனிதர்களால் செய்யமுடியாதவைகளை இவர் செய்தார். அவரோடு தேவன் இருந்ததினால் மட்டுமே இந்த கிரியைகளை செய்தார். அவரை போலவே எவரொருவர் தேவனை கொண்டிருக்கிறார்களோ அவர்களும் அற்புத கிரியைகளை நடப்பிக்க இயலும். சபை வளர்ச்சிக்கும் ஆத்தும மீட்புக்கும் இது தூண்டுதலாயுள்ளது.

அவரின் நற்கிரியைகள் அவர் பாவமில்லாதவர் என்றும் பரிசுத்தர் என்றும் வெளிபடுத்துகிறது. தீமைக்கு தீமை செய்யாமல் தீமைக்கு நன்மை செய்வதையே கொண்டிருந்தார். அவர் எதை பேசினாரோஅதை செயல்படுத்தினார். மரணம் வரையிலும் நற்கிரியை செய்தார். இயேசுவை பின்பற்றுகிறவர்களும் நற்கிரியைகள் செய்ய வேண்டும் என்றும் பணிக்கின்றார்.
அவரது இரட்சண்ய கிரியைகள் அவர் மனுமகன் என்பதை வெளிபடுத்துகிறது. பாவிகளை மீட்க பாவத்தை ஏற்றுக்கொண்டு பாவத்திலே அல்ல, பாவிகளுக்காகவே மரித்தார். தமது மரணத்தின் மூலம் இரட்சிப்பை உண்டு பண்ணினார். பாவ உலகம் மீட்கபட்ட உலகமாய் மாறலாயிற்று. இந்த கிரியையை அவர் மட்டுமே செய்தார். எனவே அவர் இரட்சிப்பின் அதிபதியாய் உயர்ந்திருக்கின்றார்.

உண்மை ஊழியர், விசுவாசிகள் இந்த மூன்றிலும் வேர் கொண்டிருப்பர்.

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே. நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ்தலர் 10:35-38.

ADD YOUR COMMENT

Powered By Indic IME