காலம் வரும்போது நினைவு கூர இவைகளைச் சொன்னேன்

காலம் வரும்போது நினைவு கூர இவைகளைச் சொன்னேன்

These things I have told you, that when the time comes, you may remember that I told you of them. (John 16:4)

John 13:19; John 14:29; Matthew 24:25; Mark 13:23; Luke 21:12,13; Act 9:16; Act 20:23,24; 2Peter 1:13-22.

அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை. (யோவான் 16:4)

யோவான் 13:19; யோவான் 14:29; மத்தேயு 24:25; மாற்கு 13:23; லூககா் 21:12,13; அப்போஸ்தலர் 9:16; அப்போஸ்தலர் 20:23,24; 2பேதுரு 1:13-22.

நினைப்பூட்டுதல்:

கர்த்தராகிய இயேசு பிதாவுக்கும் மனுகுலத்துக்கும் உள்ள உறவை நினைப்பூட்டி அதனைக் கட்டி எழுப்பும்படியாக வந்தார். ஆகையினால் தேவனுடைய இராஜ்யம் குறித்து விரித்துரைத்தார். முடிவில் என் இராஜ்யம் இவ்வுலகிற்குரியதல்ல என்றும் கூறினார்.

பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் கிரியைகளையும் உபதேசங்களையும் சபைக்குள் நினைபூட்டி கிறிஸ்துவின் சாயலை பரிணமிக்க செய்கிறார். இது தேவனுடைய ஏற்பாடு ஆகும்.

இயேசுகிறிஸ்துவின் திருபணி காலத்தில் தம்மை ஒருவரும் அறியாதபடிக்கு தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இதனை மேசியா இரகசியம் என்பதுண்டு. இதற்கான காரணம் உலகை மீட்கும்படியான தேவனுடைய நோக்கம் நிறைவேறும்படிக்கும், தனது ராஜாங்க ஸ்திதி மேலோங்காதபடிக்கும் என்பதேயாகும். இயேசுவை ராஜாவாக்க யூதர்கள் பல தடவை முயன்றும் இயேசு இடம் தரவில்லை. தமது சீஷர்களையும் அதற்கேற்றாற்போலதான் உருவாக்கினார். அவர்கள் இயேசுவை இன்னார் என்று அறிந்திருந்தும் அவர் மரித்து உயிர்த்து பரமேறுவது வரையிலும் வெளிபடையாக அறிவிக்கவில்லை.

தாம் சென்ற பின்பு தாம் போதித்தவைகள், தமது கிரியைகள், தம்மை பற்றிய காரியங்கள் யாவையும் சீஷர்கள் மறந்து போகாமலிருக்கும்படிக்கு நினைப்பூட்டி அவர்களை அவரின் சாட்சிகளாக நிறுத்த பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டார். பரிசுத்த ஆவி அவர்களை எரிந்து பிரகாசிக்கும் சத்திய தீபங்களாக வைத்தார்.

கர்த்தராகிய இயேசு அக்காலத்தில் போதித்தவைகளின் தன்மைகளை அறிந்துகொண்டு அவருக்கு உயிர் சாட்சியாக இருக்கவே பரிசுத்த ஆவி நமக்கு தரப்பட்டுள்ளார். வரங்கள், கிரியைகள் யாவும் இதற்காகவே. கனிகள் என்பது கிறிஸ்துவை பிரதிபலிப்பது ஆகும். எப்பொழுது நாம் ஆவியின் கிரியைகளினால் கனி கொடுக்க ஆரம்பிக்கின்றோமோ அப்பொழுது கிறிஸ்து தோன்றுகிறார்.

நினைப்பூட்டுதலின் ஆவியை பெற்றுக்கொள்வோம். சத்தியத்திலே நிலைத்து வாழுவோம்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து, இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன். மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன். நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரிமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம். அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். 2பேதுரு 1:13-18.

ADD YOUR COMMENT

Powered By Indic IME