காலம் வரும்போது பிதாவைக்குறித்து வெளிப்படையாகவே அறிவிப்பேன்.
time is coming when I will no longer speak to you in figurative language, but I will tell you plainly. (John 16:25)
John 16:28,29; Act 2:33-36; 2 Corinthians 3:12-18; 2 Corinthians 4:2; Matthew 10:27; Mark 8:32.
இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். (யோவான் 16:25)
யோவான் 16:28,29; அப்போஸ்தலர் 2:33-36; 2கொரிந்தியர் 3:12-18; 2கொரிந்தியர் 4:2; மத்தேயு 10:27; மாற்கு 8:32.
வெளிப்படையாக:
இவ்வார்த்தையின் பொருள் என்னவெனில் சுதந்தரமாக பேசுதல், பயமின்றி ஒளிவு மறைவின்றி பேசுதல், ஆணித்தரமாக பேசுதல் என்பதாகும். உவமை என்பதற்கு மறைபொருளாக பேசுதல் என்று பொருள்படும். கர்த்தராகிய இயேசு தமது சீஷர்களிடம் ‘இப்பொழுது உவமைகளாக, மறைபொருளாக பேசுகிறேன். காலம் வரும்போது வெளிப்படையாக பேசுவேன் என்று கூறுகின்றார். இயேசுகிறிஸ்து பரலோகத்தின் செய்தியை நான்கு முறைகளைப் பயன்படுத்தி பேசியிருக்கக்கூடும். முதலாவது, கதைகள் மூலமாக பேசுவது, 2 வது கேள்வி கேட்டு புரிய வைப்பது, 3 வது எதிர்கேள்வி கேட்டு புரிய வைப்பது, 4 வது நேரடியாக பேசுவது. இங்கே இயேசுகிறிஸ்து கதைகளின் வழியாக பேசுகிறார். இதனை ஆவிக்குரியவர்கள் என்கிறவர்களாகிய பரலோகத்திலிருந்து கிருபை பெற்றவர்கள் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும். காலம் வரும்போது கதைகளைப் பயன்படுத்தமாட்டார், உண்மையை உண்மையாகவே பேசுவார். பகிரங்கமாக, வெளிப்படையாக, ஒளிவு மறைவின்றி, பட்டவர்த்தனமாக பேசுவார்.
இயேசு கிறிஸ்து பரலோகத்துக்கு போக ஆயத்தமாயுள்ள நேரத்தில் காலம் வரும்போது வெளிப்படையாக பேசுவேன் என்று கூறுவதை எப்படி புரிந்துக் கொள்ள முடியும்? மரணமடையுமுன்பதாகவே வெளிப்படையாக பேசுவார் என்று சிலரும், இயேசுவின் இரண்டாம் வருகையில் வெளிப்படையாக பேசுவார் என்று சிலரும், 1000 வருட அரசாட்சியில் வெளிப்படையாக பேசுவார் என்று சிலரும் விளக்கமளிக்கின்றனர். ஆனாலும், பரிசுத்த ஆவியானவர் வந்து சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவார் என்று கூறியிருப்பதால் பரிசுத்த ஆவியைக் கொண்டு பேசுவதையே குறிப்பிடும் என்று பலரும் ஒத்துக் கொள்கின்றனர்.
பரிசுத்த ஆவியானவர் ரகசியங்களை வெளிப்படுத்தி பேசுவார். பாஷை வரங்களின் ரகசியங்களை வியாக்கியானம் மூலம் வெளியரங்கமாக்குவார். மறைபொருள்களையும், அந்தரங்கங்ககளையும், இருளில் உள்ளவைகளையும் வெளிப்படுத்துவார். ஆவியானவருக்கு மறைவாக ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது. அவர் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார். எனவே, பரிசுத்த ஆவியை பெற்றுள்ள நாம் திறந்த இருதயமுள்ளவர்களாகவும், வெளிப்படை தன்மையுடையவர்களாகவும் காணப்படுவோம்.
சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன். இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல் இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம். நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும். கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2கொரிந்தியர் 5:10-17.