காயீனின் கிரியைகள் பொல்லாதவைகள், ஆபேலின் கிரியைகள் நீதியுள்ளவைகள்.
And why did he murder him? Because his works were evil and his brother’s righteous. (1John 3:12)
1Samuel 18:14,15; 1Samuel 19:4,5; 1Samuel 22:14-16; Proverbs 29:27; Matthew 27:23; John 10:32; John 15:19-25; John 18:38-40; Acts 7:52; 1Thes 2:14; 1Peter 4:4; Revalation 17:6; Psalms 37:9-16.
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. (1 யோவான் 3:12)
1சாமுவேல் 18:14,15; 1சாமுவேல் 19:4,5; 1சாமுவேல் 22:14-16; நீதிமொழிகள் 29:27; மத்தேயு 27:23; யோவான் 10:32; யோவான் 15:19-25; யோவான் 18:38-40; அப்போஸ்தலர் 7:52; 1தெசலோனிக்கேயர் 2:14; 1பேதுரு 4:4; வெளி 17:6; சங்கீதம் 37:9-16.
நீதியும் அநீதியும்.
ஒரே தாய் தந்தைக்கு பிறந்த காயின் ஆபேல் ஆகியோர் இரு வேறுபட்ட தன்மையுடையவர்களாயிருந்தனர். ஈசாக்குக்கு பிறந்த ஏசாவும் யாக்கோபும் கூட வெவ்வேறு குணங்களுடையவர்களாயிருந்தனர். ஆபிரகாமுக்கு பிறந்த ஈசாக்கின் சந்ததியும் இஸ்மவேலின் சந்ததியும் இன்று வரையிலும் பகைமையுடையவர்களாகவே இருக்கின்றனர். இந்த தன்மையை குறித்து ஓசியா சொல்லும்போது ஏசாவை வெறுத்தேன், யாக்கோபை சிநேகித்தேன் என்று கர்த்தர் கூறுவதாக கூறுகின்றார். யோவான் ஆசிரியர் காயீன் ஆபேலை வித்தியாசமான குணநலங்கொண்டவர்களாக காண்பிக்கின்றார்.
காயீனின் செயல்கள் யாவும் பொல்லாதவைகளாக இருந்தன. ஆபேலின் செயல்கள் யாவும் நீதியுள்ளவைகளாக இருந்தன. இதனை யோவான் நன்கறிந்திருந்தார். ஆனால் விளக்கம் தரவில்லை. அதேவேளையில் காயின் பிசாசினால் பிறந்தவன் என்றும் ஆபேல் தேவனால் பிறந்தவன் என்றும் நம்மை புரிய வைக்கின்றார். காயின் பிசாசினால் பிறந்தவனாகையினால் அவனுடைய கிரியைகள் பொல்லாதவைகளாக இருந்தது. அதாவது சபிக்கப்பட்ட பூமியில் பயிரிட்டு கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அனுபவித்து வலியையும் வேதனையையும் அனுபவித்து தேவன்மேல் குறை சொல்லி முறுமுறுத்து எரிச்சலடைந்து மனதளவிலும் குணங்களடிப்படையிலும் கெட்டவனாக மாறிப்போனான். சபிக்கப்பட்ட பூமி என்று அறிந்திருந்தும் அதிலே தன் பிரயாசங்களை செலவழித்து தன்னைதானே கெடுத்துக் கொண்டான். ஆபேலோ சபிக்கப்பட்ட பூமியில் தன் காலங்களை செலவழிக்காது காடுகளிலுள்ள ஆடு மாடுகளை பழக்குவித்து நற்குணமுள்ளவனாக காணப்பட்டான். காட்டு மிருகங்களை நாட்டு மிருகங்களாக்கி நல்ல வெற்றியைக்காண்டான். இதனால் காயின் காலம் செல்ல செல்ல பொல்லாங்கும் பொறாமையும் உள்ளவனாக மாற ஆபேலோ காலம் செல்ல செல்ல சாந்தமும் அமைதியுமான நற்குணங்கள் உடையவனாக மாறினான்.
இக்காலத்திலும் தங்கள் உழைப்பு பிரயாசம் யாவும் வீணாவதையும் நஷ்டமடைவதையும் வருத்தம் வேதனை உண்டாக்குவதையும் அறிந்து நாட்கள் செல்ல செல்ல துன்மார்க்கத்துக்கேதுவானவர்களாக மாறுகின்றனர் பலர். பலனற்ற தரிசு நிலத்தில் பிரயாசங்களை செலவழிப்பதை விட்டு விட்டு தேவனின் வழிகாட்டுதல்படி வேறு முறைமைகளை பயன்படுத்தி வெற்றியடைவதே மேல். எதை செய்தாலும் தேவனின் விருப்பமறிந்து செயல்படுக. தன் முயற்சியினால் தேவன் சந்தோஷப்படுகிறார் என்பதை கவனித்து பணி செய்க. பவுல் எபேசு சபைக்கு எழுதியிருப்பதை கவனிக்குக.
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். எபேசியர் 5:11-21.
கேள்வி. பயனற்ற காரியங்களில் ஏன் நமது நேரத்தையும் பிரயாசத்தையையும் பொருளையும் திறமையையும் தாலந்துகளையும் செலவழித்து வேதனைபட வேண்டும்?