காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
Thomas,u see Me,u believed.Blessed are those who have not seen and yet have believed. (John 20:29)
John 20:8; John 4:48; Luke 1:45; 2Corinthians 5:6-9; Hebrews 11:1,27,29; 1Peter 1:8; Psalms 17:15; 1John 3:1-3.
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20:29)
யோவான் 20:8; யோவான் 4:48; லூக்கா 1:45; 2கொரிந்தியர் 5:6-9; எபிரெயர் 11:1,27,29; 1பேதுரு 1:8; சங்கீதம் 17:15; 1யோவான் 3:1-3.
காணாது விசுவாசித்தல்.
விசுவாசித்தலில் 5 வகைகள் உண்டு. தொட்டு, பார்த்து, கேட்டு, படித்து, அனுபவித்து விசுவாசித்தலே அவைகள் ஆகும். தோமா அவரை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ஏற்கனவே பிதாவை காண்பிக்கும்படி பிலிப் இயேசுவிடம் கேட்டிருந்தார். இப்பொழுது தோமா கேட்கிறார். இயேசுவோ தொட்டு, அனுபவித்து அறிந்து விசுவாசிக்கும்படி கூறினார். தோமாவோ அவரை பார்த்தவுடன் விசுவாசத்துக்குள் வந்து விட்டதினால் அவரை தொட்டு, அனுபவித்து அறிந்துக் கொள்ள முயலவில்லை. என்றாலும் கண்டால் விசுவாசிப்பேன் என்று சொன்ன தோமாவிடம் நீ இப்பொழுது என்னை விசுவாசிக்கிறாய், அப்படியிருந்தும் என்னை கண்டபின்பே , என் சத்தம் கேட்ட பின்பே நீ விசுவாசிப்பதினால் என்னை காணாமலும், என்னை தொட்டு பார்க்காமலும், என்னை அனுபவித்து அறியாமலும், என் சத்தம் கேளாமலும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்களாயிருப்பார்கள் என்று கூறுகிறார்.
அவரை பார்க்கவோ, அவரோடு பழகவோ, அவர் சத்தத்தை கேட்கவோ, அவரின் அற்புதங்களை அனுபவிக்கவோ செய்யாமல் அவரது வாக்கியங்களை வாசித்து அறிகிறவர்களும், வாசிப்பதை கேட்டு அறிகிறவர்களும் இயேசுவே ஆண்டவர் என்றும், மீட்பர் என்றும், தேவன் என்றும் ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பார்களானால் அவர்களே அதிக பாக்கியவான்களாவார்கள்.
கிறிஸ்தவ சபைகளில் பெரும்பாலான மக்கள் இயேசுவை குறித்த வாக்கியங்களை வாசித்தோ, வாசிப்பதை கேட்டோ விசுவாசத்துக்குள் வந்தவர்களாயுள்ளனர். இப்படிபட்டவர்கள் வசனத்தில் வேரூன்றி வளர்ந்தவர்களாதலால் பாடுகளிலும், உபத்திரவங்களுலும், இழப்புகளிலும் இயேசுவில் உத்தமமாய் பற்றி நிற்கிறவர்களாயுள்ளனர்.
பல கிறிஸ்தவர்கள் அற்புதங்களை கண்டு அனுபவித்து விசுவாசத்துக்குள் வந்தவர்களாயுள்ளனர். இவர்களுடைய வாழ்வில் இழப்புகள், தோல்விகள், வேதனைகள் வரும்போது பின்வாங்கிப்போகிறவர்களாயுள்ளனர். இப்படிபட்ட நிலைமைகள் தற்கால சபைகளில் குறிப்பாக புதிதாக ஸ்தாபிக்கப்படுகிற சபைகளில் பரவலாக காணப்படுகின்றது. ஸ்காலர்சிப் மற்றும் அரசு உதவிகளுக்காக வேண்டி தங்கள் எழுத்தேடுகளில் இந்துக்களாகவும், பேச்சு வழக்கில் கிறிஸ்தவர்களாகவும் காட்டிக்கொள்கின்றனர்.
வசனத்தின் ஆவியினால் உண்டாகிற விசுவாசமே உன்னத விசுவாசம். இந்த விசுவாசத்தினால் உண்டாகும் கிரியைகளே உன்னத கிரியையாகும். இந்த கிரியைகளில் தங்களை உட்படுத்தி வாழ்வதுவே உன்னத அனுபவமாகும்.
ஐந்துவகை விசுவாசமும் அவசியமே. அவைகளில் படித்து அறிந்து விசுவாசிப்பதுவே அல்லது கேட்டு அறிந்து விசுவாசிப்பதுவே சிறந்தது. இவர்கள் வாழ்வில் வசனமே மேலோங்கி நிற்கும். வசனத்தினால் சாத்தானை ஜெயித்து ஆவிக்குரிய வாழ்வில் செழிப்பை அடைய இயலும். இவர்கள் ஓடினாலும் இளைப்படையார். இழந்தாலும் சோர்வடையார்.
அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. 38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். யோவான் 6:24-29, 35-40.