கள்ளனாகிய பரபாஸை விடுதலைபண்ண வேண்டும்

கள்ளனாகிய பரபாஸை விடுதலைபண்ண வேண்டும்.

Then they all cried again, saying,Not this Man, but Robber Barabbas. (John 18:40)

Matthew 27:16-26; Mark 15:7,15; Luke 23:18,19,25; Act 3:13-17; Isaiah 49:7; Isaiah 53:1-5; Micah 3:1-4.

அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள், அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான். (யோவான் 18:40)

மத்தேயு 27:16-26; மாற்கு 15:7,15; லூக்கா 23:18,19,25; அப்போஸ்தலர் 3:13-17; ஏசாயா 49:7; ஏசாயா 53:1-5; மீகா 3:1-4.

கொலைபாதகனின் விடுதலை விரும்பிகள்.

பரபாஸ் என்பவன் கொள்ளை அடிக்கிறவர்களின் கூட்டத்துக்கு தலைமையானவன், பல கொலைகளை செய்தவன், ரோமர்களுக்கு எதிராக கலகம் செய்தவன், யூதாஸின் நண்பன், இஸ்ராயேலரின் விடுதலைக்காக போராடினவன் என்று பலவாறாக பாரம்பரியங்கள் கூறுகின்றது. பொதுவாக கவனிக்குமிடத்து நீதிமானாகிய இயேசுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்து, கொலைபாதகனும் கள்ளனுமாகிய பரபாஸை விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்ட இஸ்ராயேலரின் மனப்போங்கு எப்படிபட்டது என்பதை அறிகின்றோம். இந்த நிகழ்வில் அமைந்துள்ள ஒருசில உண்மைகளை கவனிப்போம்.

முதலாவது, நீதிமானாகிய இயேசு நன்மைக்காக, பாவவிடுதலைக்காக பலியாக்கப்பட வேண்டும் என்பது தேவ சித்தமாகும். நீதிமானின் பலியிடபடுதலினால் பாவிகளும், கொலைபாதகரும், கள்ளர்களும் விடுதலை பெறுகிறார்கள்.

இரண்டாவது, இஸ்ராயேலரின் ஆன்மீக பார்வை குருடாக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றது. நீதிமானையும், துன்மார்க்கனையும் அடையாளம் காணமுடியாதபடிக்கு பாரம்பரியங்களினாலும், வைராக்கியங்களினாலும் குருடாக்கப்பட்டவர்களாயுள்ளனர் என்பதாகும்.

மூன்றாவது, பாவம் நிறைந்த உலகில் நீதி செத்து அநீதி தளைத்தெழும்பும் என்பதற்கு அடையாளம். இனிமேல் அநீதி நீதியை கொல்லும், அதர்மம் தர்மத்தை வெல்லும். தீமை நன்மையை மேற்கொள்ளும். சன்மார்க்கமும் துன்மார்க்கமும் ஆவிக்குரியவைகளையும், ஆவிக்குரியவர்களையும் துன்புறுத்தும்.

நான்காவதாக, அநீதியை நீதியாகவும், அதர்மத்தை தர்மமாகவும், தீமையை நன்மையாகவும் பறைசாற்றும் பலம் உண்டாகும். மனிதர்களின் மனம் நீதியைவிட்டு மிக தொலைவுக்கு சென்றுவிட்டதினால் நீதியின் வெளிச்சம் மறைந்து போகும்.

ஐந்தாவதாக, இருளின் சங்கிலியால் கட்டப்பட்ட சாத்தான் முழு உலகையும் இருளுக்குள் அடிமைப்படுத்துவான்.

இவைகள் எல்லாவற்றிலேயும் இருளை மேற்கொள்ளும் ஒளியாகிய சுவிசேஷத்தைக் கொண்டுள்ள சபையானது இருளின் மத்தியில் ஸ்தாபிக்கப்பட்டு கொண்டேயிருக்கும். காலம் நிறைவேறும்போது அநீதியை அழித்து சாத்தானை மேற்கொண்டு நீதியின் சூரியன் தன் ஆட்சியை நிலைநிறுத்தும்.

அநீதியே நீ தலைவனாயிரு. எங்களை சிறைபடுத்து. இது உனது காலம்.
ஆனால் …
மறந்துவிடாதே …
இருளின் அதிகாரத்தை மேற்கொள்ளும் ஒளி எங்களுக்குள் இருப்பதால் ஜெயிக்கிற சேனைகளாய் எழும்புவோம்.

உலக ஆட்சியாளர் இயேசு கிறிஸ்து வரப்போகிறார்.

நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது. ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி அவர்கள்மேலிருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி, என் ஜனத்தின் சதையைத்தின்று அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு அவர்கள் எலும்புகளை முறித்து பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.

நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.

ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம். மீகா 3:1-4,8;4:1-2

ADD YOUR COMMENT

Powered By Indic IME