கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை

கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை.

Are you also from Galilee? Search and look,for no prophet has arisen out of Galilee. John7:52. 

Jn7:41; Jn5:39; Jn1:46; Jn9:34; Mt4:15,16; Mt26:69; Lk24:19; Act2:7; Gen19:9; Ex2:14; 1Kin22:24; Pr9:7,8.

அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். (யோவான் 7:52) 

யோவான் 7:41; யோவான் 5:39; யோவான் 1:46; யோவான் 9:34; மத்தேயு 4:15,16; மத்தேயு 26:69; லூக்கா 24:19; அப்போஸ்தலர் 2:7; ஆதிியாகமம் 19:9; யாத்திராகமம் 2:14; 1 இராஜாக்கள் 22:24; நீதிமொழிகள் 9:7,8.

கலிலேயனா? No..
தேவனுடைய கிரியைகளும், உபதேசங்களும் இடம் சார்ந்து வெளிப்படுகிறவைகளல்ல, மனிதம், மனம் சார்ந்து தோன்றுபவைகள்.
இடம் சார்ந்து, மொழி சார்ந்து, ஜாதி சார்ந்து, அந்தஸ்து சார்ந்து அவர் கிரியை செய்வதில்லை. எந்த ஜனத்திலாயினும் அவருக்கு பயந்து, நீதியை செய்கிறவர் எவராயிருந்தாலும் அங்கே அந்நபர் மூலம் கிரியை செய்கிறார்.

கலிலேயா, சமாரியா, நாசரேத்து போன்றவைகள் யூதசமய ஒழுங்குபடி தீட்டான இடங்களல்ல, யூதர்களோடு கலந்த கலப்பின மக்களாய் காணப்பட்டதுவே அருவருப்பாய் கருதப்பட்டது.
ஆனால் இயேசுகிறிஸ்து வெளிப்புற தீட்டைவிடவும் உட்புற தீட்டே இருக்கலாகாது என்று போதித்தவராய் இப்படிபட்ட ஜனங்களோடு நெருங்கி பழகி அவர்களை மேம்பாடு அடைய செய்தார்.

யூத சமய ஒழுங்கின்படி இனப்பாகுபாடுகள் காணப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ சமய ஒழுங்கின்படி இனப்பாகுபாடு, மொழிபாகுபாடு, தேசப்பாகுபாடு இருக்கலாகாது என்பதுவே உண்மையாகும்.

தோற்றத்தைபார்த்து தீர்ப்பு செய்கிறவரல்ல, உள்ளத்தை பார்த்தே தீர்ப்பு செய்கின்றார்.
இயேசு கலிலேயரல்ல, பெத்லகேமியன்.
ஆனால் கலிலேயரையும் மீட்கும்படி கலிலேயராகவும் அறியப்பட்டார்.
பவுலும் இவ்வாறே நடந்து கொண்டார்.

கைவிடபட்ட, ஒதுக்கபட்ட ஜனங்களோடே தன்னை இணைத்து கொள்கிறவனே உண்மையான கிறிஸ்தவன்.

கர்த்தாவே, உம் மகனை மண்ணின் மைந்தர்களை மீட்க மண்ணின் மைந்தராகவே அனுப்பினீர்.
பாவியை மீட்க பாவியாக மாற்றினீர். உமக்கு நன்றி.
இப்பொழுது அவரோடுகூட ஆளுகை செய்யவும் ஆயத்தபடுத்தியுள்ளீர். உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME