ஆசா தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.
ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது, அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.
(2 நாளாகமம் 16:12)
2 நாளாகமம் 16:7-14; 2 நாளாகமம் 28:22; யோபு 33:19-30; எரேமியா 17:5-8; லூக்கா 8:12-48; யாக்கோபு 5:13-16; வெளி 3:17-19.
ஆபத்துகள் வரும்போது புலக்கண்களுக்கு புலப்படும் உதவிகளையே தேடுகிறோம்…
உலகியல் பரிகாரிகள் ……
1.எளிதில் காணக்கூடியவர்கள் …..
2.எளிதில் பெறக்கூடியவர்கள். …
3.எளிதில் புரிந்து கொள்ள கூடியவர்கள்…
4.எளிதில் நினைவு கூர கூடியவர்கள்…
என நினைத்து அவர்களை தேடுகிறோம்…
ஏன் ஆசா போன்றவர்கள் இத்தகைய பரிகாரிகளை தேடுகின்றனர்?……
1.தேவனோடு நல்ல உறவு இல்லை….
2.தேவனுடைய கிரியைகளை சரியாக அனுபவித்ததில்லை…
3.தேவனுடைய சத்தத்தை கேட்டதில்லை..
4.தேவனை ஆவிக்குரிய அனுபவத்தில் கண்டதில்லை…
5.தேவன் பிறர் வாழ்வில் செய்பவைகளை குறித்து கேள்விபட்டதில்லை அதை நம்புவதும் இல்லை…..
ஒருவரை குறித்து எந்த அளவுக்கு நீ அறிகின்றாயோ அந்த அளவுக்குதான் அவரோடு உனக்கு நெருக்கமுண்டாகும். …