கனிகொடுக்க, நிலைத்திருக்க நான் உங்களை ஏற்படுத்தினேன்.
I appointed u that u should go and bear fruit,and that ur fruit should remain, (John 15:16)
John 20:21-23; John 21:15-17; Act 1:8; Romans 15:15,16; 1Corinthians 9:16-18; Galathians 1:15,16; Ephesians 2:10; 1Timothy 2:7; 2Timothy 1:11; Titus 1:5.
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். (யோவான் 15:16)
யோவான் 20:21-23; யோவான் 21:15-17; அப்போஸ்தலர் 1:8; ரோமர் 15:15,16; 1கொரிந்தியர் 9:16-18; கலாத்தியர் 1:15,16; எபேசியர் 2:10; 1தீமோத்தேயு 2:7; 2தீமோத்தேயு 1:11; தீத்து 1:5.
ஏற்படுத்தப்பட்ட சீஷர்கள்:
மாற்கு 3:13-15 ல் கர்த்தராகிய இயேசு சீஷர்களை ஏற்படுத்தியது அல்லது நியமித்ததின் நோக்கம் குறித்து தரப்பட்டுள்ளது. சீஷர்கள் அழைக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்கள். மனுஷரைப் பிடிக்க அழைக்கப்பட்டவர்கள் மனுஷரைப் பிடிக்க நியமம் பெற்றார்கள். அவரால் அழைக்கப்பட்ட சீஷர்கள் ஏராளமாய் இருந்தார்கள். அவரை பின்பற்றியவர்கள் ஏராளமாய் இருந்தார்கள். எல்லாரும் அப்போஸ்தலர்களாக நியமம் செய்யப்படவில்லை. பன்னிருவர் மட்டுமே அப்போஸ்தலர்களாக நியமம் பெற்றனர். தேவன் தமது குமாரனின் சரீரமாகிய சபையிலே 1கொரிந்தியர் 12:28 ன் படி அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், அற்புதங்கள், வரங்கள், பாஷைகளை ஏற்படுத்தியுள்ளார் என்று தரப்பட்டுள்ளது. மேலும் எபேசியர் 4:12,13 ல் தேவன் தமது குமாரனின் சரீரமாகிய சபையிலே ஐந்து விதமான ஊழியங்களை ஏற்படுத்தினார் என்றும் தரப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டு சபையில் தேவன் ஊழியங்களையும், ஊழியர்களையும், கிரியைகளையும், வரங்களையும் ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் பு. ஏ ன் காலத்தில் சபை அமைப்பு உண்டு என்று அறியமுடிகின்றது. ஆதி சபைகளில் கண்காணிகளையும், உதவிகாரர்களையும், மூப்பர்களையும் நியமனம் செய்துள்ளார்கள் என்பதை 1தீமோத்தேயு 3:1-13 ல் காண்கின்றோம். அப் 6.
இவ்விதம் நியமனம் செய்யப்பட்டதின் நோக்கம் மேற்சொன்ன பகுதிகளில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அவரோடு இருக்க, பிரசங்கம் பண்ண, வியாதிகளை குணமாக்கி பிசாசுகளைத் துரத்த, விசுவாசத்தில் நிலைத்திருக்க செய்ய, பூரண வளர்ச்சியடைய செய்ய, பரிசுத்தவான்கள் சீர்பொருந்தபண்ணப்பட, சுவிசேஷ வேலைக்காக, நற்கிரியைகள் செய்ய இவர்கள் அவரால் நியமிக்கப்பட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கனி கொடுக்கும்படியாகவும், அந்த கனி மறைந்து போகாமல் என்றென்றும் நிலைத்திருக்கும் படியாகவும் சபைகளை ஸ்தாபித்து ஊழியர்களை பற்பல பெயர்களில் நியமனம் செய்துள்ளார். அதனை சபையானது இதுவரையிலும் தொடர்ந்து செய்து வருகின்றது. எனவே நியமனங்களை குறை சொல்லுகிறவர்கள் தேவனது நியமனங்கள் மீது குற்றம் சுமத்துகிறவர்களாக காணப்படுவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். எபேசியர் 4:11-15.