கூலியாள் ஓநாயைக் கண்டு ஆடுகளை விட்டோடிப்போகிறான்.
one who does not own the sheep, sees the wolf coming and leaves the sheep and flees. (John 10:12)
Jn10:3; 1Tim3:3,6,8; 2Tim4:10; 1Pet5:2,3; Ps10:9; Isa56:10-12; Jer10:21; Jer23:1; Eze34:2-6; Zec11:16,17.
மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான், அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். (யோவான் 10:12)
யோவான் 10:3; 1தீமோத்தேயு 3:3,6,8; 2தீமோத்தேயு 4:10; 1பேதுரு 5:2,3; சங்கீதம் 10:9; ஏசாயா 56:10-12; எரேமியா 10:21; எரேமியா 23:1; எசேக்கியேல் 34:2-6; சகரியா 11:16,17.
ஓடிப்போகும் மேய்ப்பன்:
ஓநாய் வருகிறதைக் கண்டு மந்தைகளை விட்டுவிட்டு தன் உயிர் காக்கும்படி ஓடிப்போகும் மேய்ப்பன் கள்ள மேய்ப்பனாக, தன் நலம் விரும்பும் மேய்ப்பனாக இருக்கின்றான்.
ஓநாய் குறித்து மத்தேயு 7:15 ல் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் என்று இயேசு கூறுகின்றார். லூக்கா 10:3 ல் ஆடுகளைப் பீறிப்போடும் ஓநாய்கள் என்றும் கூறுகின்றார். பவுல் அப்போஸ்தலர் 20:29 ல் மந்தைகளை தப்பவிடாததான கொடிதான ஓநாய்கள் என்கிறார். ஓநாய்களுக்கு 5 தன்மைகள் இருக்கக்கூடும். 1. பதுங்கி பாயும் தன்மை, 2. குறிவைத்ததை அடையாமல் விடுவதில்லை என்ற தன்மை, 3. அதன் விகாரம் எப்பொழுதும் தெரிவதில்லை. 4. தூய்மையில்லாத ஜந்து. 5. தன் கூட்டத்தைச் சேர்த்து செயல்பட துடிக்கும் தன்மை கொண்டதாகும்.
சபைகளை நிர்மூலமாக்கும் ஓநாய்களை போன்ற கொடிய கபடதாரிகளாகிய ஊழியகாரர்கள் தற்காலத்தில் பெருகியுள்ளனர். மந்தைகளின் அழகில் மயங்குகிறவர்களும், மந்தைகளின் நன்மைகளில் குறி வைப்பவர்களும், மந்தைகளின் ஆபத்தில் உடன் நிற்காதவர்களுமாய் இருக்கிறார்கள். மலர் விட்டு மலர் நாடி தேன் குடிக்கும் தேனீக்களைப்போல ஊழியர்கள் இருக்கின்றார்கள். ஓநாய்களாகிய கொடிய மேய்ப்பர்களை எதிர்த்து நின்று மந்தைகளை காக்ககூடிய ஊழியகாரர்கள் குறைவாக உள்ளனர். ஓநாய்கள் மந்தைகளை அபகரித்துக்க்கொள்வதைத் தடுத்து செயல்படும் நல்ல மேய்ப்பர்கள் இக்காலத்திற்கு அவசியமாயுள்ளது. உபதேச கோளாறுகள், பகட்டு வாழ்க்கை விரும்பிகள், சிற்றின்ப பிரியர்கள், போஜனபிரியர்கள் யாவரும் ஓநாய்களே. உண்மை ஊழியனே இப்படிப்பட்டவர்களிடமிருந்து உன் மந்தையை பாதுகாக்க நீ அழைக்கப்பட்டுள்ளாய் என்பதை மறவாதே. விசுவாசியே உன் சபையின் மேய்ப்பரை விட்டு எவ்விதத்திலும் வேறு மேய்ப்பர்களின் ஆலோசனையை ஏற்காதே.
கர்த்தாவே மந்தைகளை பீறிப்போடும் கொடிய ஓநாய்களிடமிருந்து மந்தைகளை பாதுகாக்க உதவி செய்யும்.