ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்.
While you have the light, believe in the light, that you may become sons of light. (John 12:36)
Jn1:7; Jn3:21; Lk16:8; Act13:47,48; Eph5:8; 1Thes5:5,8; 1Jn2:9-11; Isa60:1.
ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார். (யோவான் 12:36)
யோவான் 1:7; யோவான் 3:21; லூக்கா 16:8; அப்போஸ்தலர் 13:47,48; எபேசியர் 5:8; 1தெசலோனிக்கேயர் 5:5,8; 1யோவான் 2:9-11; ஏசாயா 60:1.
ஒளியை நம்புங்கள்:
இஸ்ராயேலர் இயேசுவை தேவகுமாரனாக நம்பவில்லை. அவரை ஒரு சாதாரண மனிதகுமாரனாகவே பார்த்தனர். இந்நிலையில் தானியேல் குறிப்பிடும் மனிதகுமாரனாக ஏற்காவிட்டாலும் ஏசாயா குறிப்பிடும் பாடுபடும் தாசனாகவும், ஒளியாகவும் தன்னை நம்புங்கள் என்று கூறுகின்றார்.
இஸ்ராயேலருக்கு ஆபத்துகளும், துன்பங்களும், இடறல்களும் வரப்போகிறதை அறிந்தவராய் இஸ்ராயேலர் ஒளியாகிய தம்மை நம்பும்படி கூறுகின்றார்.
கர்த்தராகிய இயேசுவை மெய்யான ஒளி என்றும், ஜீவ ஒளி என்றும், இருளை மேற்கொள்ளும் ஒளி என்றும், பிரகாசிக்க வைக்கும் ஒளி என்றும் நமப வேண்டும். ஒளியையும் ஒளியின் கிரியைகளையும் பார்த்து ஆச்சரியப்படுவதற்கல்ல, ஒளியை நம்ப வேண்டும், ஒளியை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒளியை பின்தொடர வேண்டும், ஒளியிலே நடக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒளியாக மாற முடியும்.
ஒளியின் பிள்ளைகளாக மாறுவதற்கு விசுவாச கண்கள், விசுவாச இருதயம், விசுவாச சிந்தை வேண்டும்.
ஒளியின் பிள்ளைகளே தன்னிலும் பிறரிலும் சமுதாயத்திலும் இருக்கும் தீங்கானவைகளை கண்டு அவைகளை வெளியேற்ற தகுதியுடையோராவர். தன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை பார்க்காது பிறர் கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கிறவன் ஒளியின் பிள்ளை அல்ல, இருளின் பிள்ளையே.
ஒளியின் பிள்ளையானவன் தன்னில் உள்ள தவறுகளையும், குற்றங்களையும், பிழைகளையும் உணர்ந்து அவைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ஒளியாகிய அவரிடம் முறையிடுகிறவானாயிருப்பான்.
ஒளியின் பிள்ளையானவன் ஜாதி அமைப்புகளுக்கு உடன்படாதவனாகவும், சபை பிரிவுகளுக்கு உடன்படாதவனாகவும், கட்சி மொழி பிரிவுகளுக்கு உடன்படாதவனாகவும், இனபாகுபாடுகளை குறித்து அதில் தன் மூக்கை நுழைக்காதவனாகவும் இருக்கின்றான். எல்லாரையும் ஒன்றுபோல் நேசிக்கிறவனாகவும் இருக்கின்றான்.
ஒளியை சுமந்து செல்கிறவன் இருளில் குடித்தனம் செய்ய சிந்திக்கலாகாது. ஒளி எங்கிருந்து வந்ததோ அங்குதான் நடத்தி செல்லும்.
ஒளியின் பிள்ளைகளாய் இருந்து ஒளியாகிய கிறிஸ்துவை மட்டும் மாதிரியாக கொள்ளுங்கள்.
அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.
துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். சங்கீதம் 19:11-13.