ஒளியாயிருக்கிறேன்

இயேசு, நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.

Jesus spoke to them again, saying,I am the light of the world. (John8:12a)

Jn1:4-9; Jn3:19; Jn9:5; Jn12:35; Mt4:14-16; Lk1:78,79; Lk2:32; Act13:47; Act26:23; Isa9:2; Isa42:6,7; Isa49:6; Isa60:1-3; Hos6:3.

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12) 

யோவான் 1:4-9; யோவான் 3:19; யோவான் 9:5; யோவான் 12:35; மத்தேயு 4:14-16; லூக்கா 1:78,79; லூக்கா 2:32; அப்போஸ்தலர் 13:47; அப்போஸ்தலர் 26:23; ஏசாயா 9:2; ஏசாயா 42:6,7; ஏசாயா 49:6; ஏசாயா 60:1-3; ஓசியா 6:3.

நானே ஒளி:
   அவர் ஏன் ஒளியாயிருக்க வேண்டும்?மரணம் என்ற இருளுக்குள் பாவம் மனிதர்களை தள்ளிவிட்டது. இந்த மரண இருளுக்கு எதிராக ஜீவன் என்ற ஒளியை இதுவரையிலும் ஒருவரும் கொண்டுவரவில்லை. எனவே ஜீவன் உள்ள இயேசு மரண இருளுக்குள் செல்லும் மனுகுலத்திற்கு ஒளியாயிருக்கிறார்.
பூமியின் மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், சூரிய ஒளி எவ்வளவு முக்கியமோ அவ்வளவாய் நீதியின் சூரியனாகிய இயேசு என்ற ஒளி பரலோக வாழ்விற்கு – மறு ஜென்ம வாழ்வுக்கு செல்வோருக்கு மிகவும் அவசியம்.

    ஒளி என்பது ஜீவன் உள்ளது, தூய்மை உள்ளது, வெளியரங்கமானது, வெளிப்படைதன்மை கொண்டது, நேர்மையானது, நீதியானது, சூதுவாதில்லாதது.
இந்த ஒளியை கொண்டிருப்பவர்கள் மாத்திரமே இவ்வித குணங்களை உடையவர்களாயிருப்பர்.

    கிறிஸ்து என்ற ஜீவ ஒளி நமது உள்ளங்களிலும், முகத்திலும் ஒளிரவேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்.
ஒளி மகிமைக்கு இணையானது. ஒளிவருகிறது என்றால் தேவ மகிமை நம்மில் வெளிப்படுகிறது என்று பொருளாகும்.
ஒளி வந்துபோகிற சூரிய ஒளியல்ல, என்றென்றும் நம்மில் வாசம் செய்கின்ற ஒளியாகும். அதற்காகதான் அவர் நம்மிடையில் வாசம் பண்ண வந்தார்.

   யாரெல்லாம் கிறிஸ்து என்ற ஒளியை ஏற்றுகொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஒளியுடையோராய் பிறரை ஒளிபெற வைக்கிறவர்களாய் இருப்பர். ஒளி பெறுவோம். 
ஒளியாவோம். ஒளிர்வடைய செய்வோம்.

   கர்த்தாவே உம் ஒளியை உம் மகன்மூலம் எங்களுக்கு தந்து எங்களை ஒளிர்வடைய செய்வதற்காய் உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME