நான் உலகத்திலிருக்கையில் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன்.
As long as I am in the world, I am the light of the world. (John 9:5)
Jn1:4-9; Jn3:19-21; Jn8:12; Jn12:35,36,46; Mt4:15; Lk1:79; Lk2:30-32; Act13:47; Act26:18,23; Eph5:8,14; Rev21:23.
நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். (யோவான் 9:5)
யோவான் 1:4-9; யோவான் 3:19-21; யோவான் 8:12; யோவான் 12:35,36,46; மத்தேயு 4:15; லூக்கா 1:79; லூக்கா 2:30-32; அப்போஸ்தலர் 13:47; அப்போஸ்தலர் 26:18,23; எபேசியர் 5:8,14; வெளி21:23.
உலகிற்கு ஒளி நானே:
இவ்வசனத்தில் இரண்டு காரியங்கள் இணைந்து காணப்படுகின்றன. நான் உலகில் இருக்கிறேன், நான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன் என்பதாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உலகிற்கு அனுப்பப்பட்டார். உலகிற்கு அவர் செய்யவேண்டிய திருப்பணிகளில் ஒன்றுதான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன் என்பதாகும். இருள் நிறைந்த உலகிற்கு ஒளியை கொடுக்க ஒளியாக வந்தார் இயேசு.
இயேசுகிறிஸ்து உலகைவிட்டு சென்றபின்பு அவர் கொடுத்த ஒளி உலகில் இருக்குமா? ஆம் . இயேசுகிறிஸ்து யாருடைய இருதயங்களில் இருக்கின்றாரோ அவர்களெல்லாரும் ஒளிதரும் தீபங்களாக மாறுகின்றனர். அவர் இந்த உலகில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய ஒளியை உடையவர்களாக நாம் உலகில் இருக்கின்றோம். இருளை நீக்குவதும், ஒளியாய் ஒளிர்வதும் நமது வேலையாகும்.
இருள் நிறைந்த உலகில் நாம் கிறிஸ்துவாக காட்சியளிக்க வேண்டும். கிறிஸ்துவாகிய ஒளி நம்மேல் ஒளிர்ந்தால்தான் உலகிற்கு கிறிஸ்துவாகிய ஒளி தொடர்ந்து பிரகாசித்துக்கொண்டிருக்கும்.
சூரியன் முதலாய் அனைத்து விளக்குகளும் அணைக்கப்படும நாள் வரப்போகின்றது. ஆனால் கிறிஸ்துவாகிய ஒளி ஒளிர்ந்து கொண்டேயிருக்கும். அதனை ஒருவரும் தடை செய்ய இயலாது. தடுக்கிறவர்களையும், தடைகற்களையும் ஒளிர்விக்கும் ஆற்றல் உள்ள ஒளி.
கர்த்தாவே உம் ஒளியை எங்களுக்கு தந்து எங்களை கிறிஸ்துவாகிய ஒளியாய் இருக்க செய்தமைக்காய் நன்றி.