இயேசு ஒலிவமலைக்குப் போனார்

இயேசு ஒலிவமலைக்குப் போனார்.

But Jesus went to the Mount of Olives. (John 8:1)

Mt21:1; Mt24:3; Mt26:30; Mk11:1; Mk13:3; Lk19:37; Lk21:37; Lk22:39.

இயேசு ஒலிவமலைக்குப் போனார். (யோவான் 8:1) 

மத்தேயு 21:1; மத்தேயு 24:3; மத்தேயு 26:30; மாற்கு 11:1; மாற்கு 13:3; லூக்கா 19:37; லூக்கா 21:37; லூக்கா 22:39.

ஒலிவமலை:
எருசலேமின் கிழக்கே 2 மைல் தொலைவில் காணப்படும் மலை. எருசலேமில் பண்டிகை கொண்டாடவரும்போது இம்மலை வழியாகதான் கடந்து செல்வர். இம்மலையின் மேற்கு பகுதியில் கெத்சமனே தோட்டம் உள்ளது.
கிழக்கு பகுதியில் மார்த்தாள், மரியாளின் பெத்தானியா காணப்படுகிறது.
இது ஒலிவ மரங்கள் அடர்ந்த ஒரு பகுதி. இயேசு தனிபட்ட ஜெபத்துக்கு இம்மலையை பயன்படுத்தினார்.
ஒலிவமலையானது இயேசுகிறிஸ்து தனித்து இறைவழிபாடு செய்வதற்கான ஒரு இடமாக காணப்பட்டது.
இரவு முழுவதும் இங்கே தங்கி ஜெபிப்பார்.
காலையில் தேவாலயத்துக்கு சென்று பிரசங்கிப்பார்.
தனது நேரத்தை ஜெபத்துக்கும், பிரசங்கத்துமாக பிரித்து வைத்து செயல்படுத்தினார்.
இதனால் அவரால் எல்லாவற்றையும் நன்றாக செய்யமுடிந்தது.

பிரசங்கிப்போர் பிரகாசிக்க ஜெபம் தேவை.
Baxter என்பார் தான் படிப்பதற்காக சுற்றிகட்டிய சுவரை ஜெப சுவாசத்தினால் அழுக்காக்கினார். பரிசுத்த ஆவியினால் முழுக்காட்டப்பட்டார். கெதர்மின்ஸ்ற்றர்க்கு ஜீவ நதியை அனுப்பினார்.
நூற்றுகணக்கானோரை ஆதாயம் செய்தார்.

லூத்தரும் அவரோடு சேர்ந்தவர்களும் தேவனை பிரியப்படுத்த துணிந்து அக்காலத்தின் மாயாஜாலங்களை உடைத்தெறிந்தார்.
தேசத்தை சிலுவையின் கீழே கொண்டுவந்தார்.

ஜாண் நாக்ஸ் தனது வலிமையான விசுவாச கரங்களை கொண்டு ஸ்காட்லாந்தை தன்வசபடுத்தினார். இவரின் ஜெபம் கொடுங்கோலனை அச்சமூட்டியது.

ஒயிட்பீல்டு தன் தூய்மையாலும், விசுவாச போராட்டத்தாலும் தீய ஆவிகளின் இணக்கத்தில் இருந்த ஆயிரகணக்கானவர்களை சிங்ககெபிகளிலிருந்து மீட்டெடுத்தார்.

ஜெபவெஸ்லி ஆயிரகணக்கானவர்களை கர்த்தரண்டை திருப்பினார்.

ஜெபபின்னி அமெரிக்காவின் பாதி பகுதியை தன் ஜெபம், விசுவாசம், பிரசங்கம், எழுத்துக்களால் மாற்றமடைய செய்தார். பிரிட்டீஷ் சபைகளின் மூலம் இந்த அலையை அமெரிக்காவுக்கு அனுப்பினார்.

பிரசங்கியார்கள் காலைநேரம் கர்த்தரின் பாதத்தில் ஜெபம், தியானத்துக்கு உட்கார வேண்டும்.

கர்த்தாவே உம் குமாரனின் படிப்பினைகளை நாங்கள் கற்றுகொண்டு உம்மிடம் நெருங்கிவந்து இருளின் இராஜ்ஜியத்தை வெளிச்சமாக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME