ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன்.

ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன்.

We were not born of fornication; we have one Father God. (John 8:41)

Ex4:22; Deu14:1; Isa63:16; Isa64:8; Jer3:19; Jer31:20; Mal1:6; Mal2:10; Mk7:6.

நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல, ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள். (யோவான் 8:41) 

யாத்திராகமம் 4:22; உபாகமம் 14:1; ஏசாயா 63:16; ஏசாயா 64:8; எரேமியா 3:19; எரேமியா 31:20; மல்கியா 1:6; மல்கியா 2:10; மாற்கு 7:6.

நாங்கள் வேசிதனத்தினால் பிறந்தவர்களல்ல:
ஆபிரகாமை நம்பின – மோசேயின் நியாயபிரமாணத்தைப் பின்பற்றின இஸ்ராயேல் ஜனங்கள் ஆபிரகாமின் மகனாகவும், நியாயபிரமாணத்தின் மகனாகவும் வெளிப்பட்ட இயேசுவை ஏற்றுகொள்ள இயலாது போனதற்கான காரணம் என்னவெனில் இஸ்ராயேல் ஜனங்கள் பிதாவாகிய தேவனை விட்டுவிட்டு தேவனல்லாத தேவர்களை பின்பற்றியதுவேயாகும். அவைகள் இஸ்ராயேலரின் கண்களையும், மனதையும் குருடாக்கியதினால் விசுவாச கண்கள் இல்லாதவர்களாய் போனார்கள். எனவே, இவர்கள் பிசாசின் பிள்ளைகளாக காலமெல்லாம் அடிமைப்பட்டு கிடக்கின்றார்கள். அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுகிறவர்களாகவும் மாறினர்.
விசுவாசத்தின் பாதையில் வராதிருப்பதுவே வேசிபிள்ளைகளுக்கு அடையாளமாகும்.
அந்நிய தெய்வங்களுக்கு அடிமைபட்டுபோனது சோரம்போன சோரபிள்ளைகளுக்கு அடையாளம்.
அந்நியபோதனைகளுக்கு இடம் கொடுத்து பின்வாங்கினவர்கள் இச்சையின் பிள்ளைகளாயிருக்கிறார்கள்.
இரட்சிக்கப்பட்டு பின்வாங்கி போனவர்கள் வேசித்தனத்தின் மக்களாகி விபசார சந்ததிகளாகின்றனர்.
மனந்திரும்பியும் இன்னும் பழைய பாவங்களை – தவறுகளை செய்து வாழ்வதும் வேசிபிள்ளைகளுக்கு அடையாளமே.
ஒரேதேவனை வணங்காது , நமஸ்கரியாது, பின்பற்றாது காணப்படுகிற யாவரும் விவிலிய கண்ணோட்டத்தின்படி ஆவிக்குரிய வேசித்தனத்தின் பிள்ளைகளே. அவர்களோடு உறவு வைத்துகொள்ளுவதும், அவர்களோடு சம்பந்தம் கலப்பதும் ஆவிக்குரிய வேசிதனத்துக்கு அடையாளம்.
நாம் ஒரே தேவனை பின்பற்றி அவர் நம் மீட்புக்காய் தந்துள்ள இரட்சகராகிய கிறிஸ்துவைத் தரித்துகொண்டவர்களாய் குறைவிலிருந்து நிறைவுக்கும், வியாதியிலிருந்து குணமாகுதலுக்கும், பலவீனத்திலிருந்து பலத்துக்கும், சாபத்திலிருந்து ஆசீர்வாதத்துக்கும், மரணத்திலிருந்து ஜீவனுக்கும் முன்னேறுவோம்.
கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

ADD YOUR COMMENT

Powered By Indic IME