கிறிஸ்து வரும்போது இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவரும் அறியார்

கிறிஸ்து வரும்போது இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவரும் அறியார்.

we know where this Man is from;but when the Christ comes,no one knows where He is from. (John 7:25-27)

Mt13:54-57; Mk6:3; Lk4:22; Jn7:41,42; Jn8:14; Jn9:29; Act3:17; Act8:33; Ps40:7,8; Isa11:1,2; Isa45:19; Isa53:8; Jer23:5; Jer30:21.

இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.  (யோவான் 7:27) 

மத்தேயு 13:54-57; மாற்கு 6:3; லூக்கா 4:22; யோவான் 7:41,42; யோவான் 8:14; யோவான் 9:29; அப்போஸ்தலர் 3:17; அப்போஸ்தலர் 8:33; சங்கீதம் 40:7,8; ஏசாயா 11:1,2; ஏசாயா 45:19; ஏசாயா 53:8; எரேமியா 23:5; எரேமியா 30:21.

கிறிஸ்து எங்கிருந்து வருவார்?

இயேசுகிறிஸ்துவின் வருகையை குறித்து பழைய ஏற்பாட்டில் இருவித தீர்க்கதரிசனங்கள் காணப்படுகின்றன. ஒன்று, இயேசுகிறிஸ்து மனுஷகுமாரனாக பாடுபடும் தாசனாக வருவார் என்பது.
இன்னொன்று, இயேசுகிறிஸ்து மேசியாவாக – இராஜாவாக வந்து இஸ்ராயேலரை ஆளுகை செய்வார் என்பது.
இந்த இரு தீர்க்கதரிசனங்களை குறித்து யூதர்களுக்கு இருவித அபிப்பிராயபேதங்கள் இருந்தது.
ஒன்று, இரண்டு வருகையையும் குறித்த சரியான தெளிவின்மை,
இன்னொன்று, இதில் எது முந்தியது, எது பிந்தியது என்று கணிக்க தெரியாதது ஆகும்.

தீர்க்கதரிசனங்களை தேவனுடைய ஆவியினால் மட்டுமே விளங்கிக்கொள்ள இயலும். இஸ்ராயேலரில் பலர் தேவ ஆவி இல்லாதவர்களாகவே காணப்பட்டனர். சிமியோன், அன்னாள் போன்ற சிலரே தேவ ஆவியை உடையவராயிருந்து இயேசுவை இன்னார் என்று அறிந்து வெளிபடுத்தினர்.
இவர்களைபோலவே நம்மில் பலரும் தேவனுடைய வாக்கியங்களை தேவ ஆவியை கொண்டு வியாக்கியானித்து அறிய இயலாதவர்களாயுள்ளனர்.

பாடுபடும்தாசனாக மனுஷகுமாரனாக தாவீதின் வம்சத்தில் வருவார்.
வந்து பாடுபட்டு மரித்து பரமேறிச்செல்வார்.
இதுவே முதலாம் வருகையாகும். ஏறிச்சென்றவர் மறுபடியும் இராஜாவாக – மேசியாவாக வந்து யூதர்களைகொண்டு முழு உலகையும் ஆட்சி செய்வார்.
இது 1000 வருடமாகும்.
இது இரண்டாம் வருகை.

தாவீதின் வம்சத்திலிருந்து வந்து மனுஷகுமாரனாக அறியபட்டவரை சிலர் மேசியா என்றும் கண்டு கொண்டனர். ஆனால் பலருடைய கண்கள் மூடப்பட்டு போயிற்று.
வரப்போகிற இரண்டாம் வருகையை குறித்தும் பலருக்கு சரியான வெளிச்சமின்றி பலவாறாக பேசி திரிகின்றனர்.

ஆவிக்குரியவைகளை ஆவியை கொண்டு விளங்கிக்கொள்ளுங்கள்.

கர்த்தாவே, உம் குமாரனை பலியாக தந்து மீட்டீர். திரும்ப இராஜாவாக கொடுத்து ஆளுகை செய்யப்போகிறீர். ரகசிய அனுப்புகை மூலம் எங்களை பரதீசில் சேர்க்க போகிறீர். உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME