ஒருவன் மறுபடி பிறவாவிட்டால் தேவ ராஜ்ஜியத்தை காணமாட்டான்

ஒருவன் மறுபடி பிறவாவிட்டால் தேவ ராஜ்ஜியத்தை காணமாட்டான்

இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 3:3)

யோவான் 12:40; மத்தேயு 13:11-16; மத்தேயு 16:17; 2கொரிந்தியர் 4:4; கலாத்தியர் 6:15; எபேசியர் 2:1; தீத்து 3:5; யாக்கோபு 1:18; 1 பேதுரு 1:23-25; 1 யோவான் 2:29; 1 யோவான் 3:9; 1 யோவான் 5:1,18.

மறுபடி பிறத்தல் – Born Again.
1. மறுபடி பிறத்தல் என்பது என்ன?

– யோவான் 1:12,13 ன் படி விசுவாசத்தின் அடிப்படையிலான தெய்வீக பிறப்பு. கிறிஸ்துவை போல வாழ்தல்.
– யோவான் 3:6 ன் படி ஆவியினால் பிறத்தல் ஆகும். ஆவியானவரின் ஆளுகைக்குள் வருதல்.
– 1 பேதுரு 1:23 ன் படி சத்திய வசனத்தினாலே ஜெநிப்பிக்கபடுதல். வசனத்தின் படி வாழ்தல்.
– இது பாவத்துக்கு செத்து நீதிக்கு பிழைத்தல்.
– பாவ மனுஷன் செத்து கிறிஸ்து சாயலாக மாறுவது.

2. ஏன் மறுபடி பிறக்க வேண்டும்?

– ரோமர் 6:2 ன் படி கீழ்படியாமையால் பாவத்திலே மரித்து போனோம்.

– ஆதியாகமம் 3:23 ன் படி தேவனோடுள்ள நல்ல உறவை இழந்து போனோம்.

– கலாத்தியர் 4:8 ன் படி சாத்தானுக்கு அடிமைகளாகி விட்டனர்.

– தேவனுடைய இராஜ்ஜியத்தை காண மறுபடி பிறக்க வேண்டும். மனிதன் தனக்கு தானே மாற்றத்தை கொண்டு வர முடியாது.
எனவே மறுபடி பிறத்தல் அவசியம்.

3. மறுபடி பிறத்தல். இது இந்து மார்க்கத்தின் மறு ஜென்மமல்ல.
அங்கே, மரித்தபின்பு இரண்டாம் முறையாக வேறு ஒன்றாக பிறப்பது. இங்கோ, ஒரே வாழ்வில் நடக்கும் இருவித மாற்றத்தை குறிப்பதாக உள்ளது. அதாவது இது மனமாற்றம்.

4. மறுபிறப்பும் தேவனுடைய இராஜ்ஜியமும். இயேசுவின் இராஜ்ஜியம் இவ்வுலகு சார்ந்ததல்ல.
அது ஆவியில் நிலை கொண்டிருப்பது. பிசாசுகளின் ஆவிகள் அகற்றபட்டு தேவ ஆவியின் ஆளுகைக்குள் வருவது. மறுபடி பிறந்து தேவ ஆவியை பெற்றவர்கள் மட்டுமே இந்த ஆளுகையை காண முடியும்.
பிறந்து, வளர்ந்து, முதிர்ச்சி அடையும்போது இந்த ஆளுகைக்குள் பிரவேசிக்க முடியும்.

காண்பதற்கு மறுபடி பிறத்தல்.
பிரவேசிப்பதற்கு பிறந்தால் மட்டும் போதாது. வளரவேண்டும், முதிர்ச்சியடைய வேண்டும், திரள் கனி கொடுக்க வேண்டும்.

பிறந்தால் மட்டும் பரலோகில் போகவியலாது. பிறக்காமல் வளரவோ, முதிர்ச்சியடையவோ, கனி கொடுக்கவோ இயலாது.

கர்த்தாவே, நாங்கள் உம்மில் பிறந்து உமது ராஜாங்கத்தை கண்டுமகிழ எங்களுக்கு உதவி செய்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME