ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால் எறியுண்டு உலர்ந்து போவான்
If anyone does not abide in Me, he is cast out and withered;gather,burned. (John 15:6)
Job15:30; Psalms 80:15; Isaiah 14:19; Isaiah 27:19,20; Ezekiel 15:2-7; Ezekiel 17:9; Ezekiel 19:12-14; Matthew 3:10; Matthew 7:19; Matthew 13:41,42; Hebrew 6:7,8; Hebrew 10:26,27.
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். (யோவான் 15:6)
யோபு 15:30; சங்கீதம் 80:15; ஏசாயா 14:19; ஏசாயா 27:19,20; எசேக்கியேல் 15:2-7; எசேக்கியேல் 17:9; எசேக்கியேல்19:12-14; மத்தேயு 3:10; மத்தேயு 7:19; மத்தேயு 13:41,42; எபிரெயர் 6:7,8; எபிரெயர்10:26,27.
நிலைத்திராதவன் நிலை:
இயேசுகிறிஸ்து மனிதனல்ல, மனிதகுமாரனாக பரலோகத்திலிருந்து வந்தவர். பூமிக்கு வந்தவர் பூமிசார் பணிகளை முடித்து விட்டு பரலோகத்திற்கு சென்றுள்ளார். இந்த பூமியிலே நல்லவன் ஒருவனும் இல்லை. எனவே நல்லவர் என்று சொல்லப்படும்படியாகவே பரலோகத்திலிருந்து வந்தார். தேவன் நல்லவர். எனவே அவரின் குமாரனும் நல்லவரே. நல்லவராகிய அவரோடு இணைந்து கொள்ளுகிறவர்கள் மாத்திரமே அவரின் இராஜ்ஜியத்துக்கு போகமுடியும். அல்லாதோர் அக்கினிகடலாகிய எரிநரகத்திலே தள்ளப்படுவர்.
இயேசுவிலே நிலைத்திருக்க விருப்பமில்லாதவர்கள் அதாவது இயேசுவில் நிலைத்திருக்க தகுதியில்லாதவர்கள் வெளியே எறியப்படுவார்கள், புறம்பே எறியப்படுவார்கள். அதாவது கொடியை அறுத்தோ, அல்லது வேரோடு பிடுங்கியோ புறம்பே எறியப்படுவர். வெளியே என்பது புறம்பாக்கப்படுதல் ஆகும். கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லியும் கனி கொடுக்காதவர்கள், ஆத்துமாக்களை சம்பாதிக்காதவர்கள் சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்துக்கு புறம்பாக்கப்படுவார்கள்.
புறம்பாக்கப்படுகிறவர்கள் வெயிலிலே போடப்பட்டு உலர்த்தப்படுவார்கள். அதாவது வறுமையினாலும், பசியினாலும், ஈளையினாலும், வியாதியினாலும் மற்றும் பலவிதமான வேதனைகளினாலும் காய்ந்து போகப் பண்ணுவார்.
காய்ந்துபோகப்பண்ணப்பட்டவர்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு எரிகிற அக்கினியாகிய எரிநரகத்திலே போடப்படுவார்கள். எனவே நம்மில் உள்ள குறைகளை நாமே ஆராய்ந்து கிறிஸ்துவிலே நிலைகொண்டிருக்க முயற்சிப்போம்.
இப்படியிருக்க தன்னை நிற்கிறவன் என்று எண்ணிக்கொள்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க கடவன்.
கிறிஸ்துவில் நிலைகொள்ளாதவன் நரகிலே நிலைகொள்வான், கனிதராதவன் பிடுங்கப்படுவான், எரிநரகிலே தள்ளப்படுவான்.
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார். மத்தேயு 3:8-12.