நானே கொடுக்கிறேன்

ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான். நானே கொடுக்கிறேன்.

No one takes it from Me, but I lay it down of Myself. I have power to lay it down, (John 10:18)

Jn18:5,6; Jn19:11; Mt26:53-56; Jn2:19-21; Act2:24,32; Act3:15; Phi2:6-8; Tit2:14; Heb2:9,14,15; Isa53:10-12.

ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். (யோவான் 10:18)

யோவான் 18:5,6; யோவான் 19:11; மத்தேயு 26:53-56; யோவான் 2:19-21; அப்போஸ்தலர் 2:24,32; அப்போஸ்தலர் 3:15; பிலிப்பியர் 2:6-8; தீத்து 2:14; எபிரெயர் 2:9,14,15; ஏசாயா 53:10-12.

திரும்ப பெறும் ஜீவன்:
பாவத்தினின்றும், நியாயபிரமாணத்தின் அடிமைதனத்தினின்றும், சாத்தானிடமிருந்தும் மக்கள் மீட்கப்படும்படியாக இயேசுகிறிஸ்து தமது ஜீவனைக் கொடுத்தார். இந்த ஜீவனைக் கொடுத்த செயலில் சில விஷயங்கள் அடங்கியுள்ளன. மறுபடியும் பெறும்படியாகவே ஜீவனைக் கொடுத்தார். இயேசுவின் ஜீவனை ஒருவனும் இயேசுவிடமிருந்து பறித்துக்கொள்ள இயலாது. கொடுத்த ஜீவனை திரும்பபெற வேண்டுமா? வேண்டாமா என்பதை தீர்மானிப்பவர் நானே என்று கூறுகின்றார்.

இயேசு தம் ஜீவனை உலகம் மீட்கப்படும்படி கொடுத்தார். தாம் ஒப்புக்கொடுத்த ஜீவனை தாமே திரும்ப தந்தையிடமிருந்து எடுத்துக் கொள்கிறார். அவர் பெற்றுள்ள இந்த ஜீவன் சாத்தானால் பறித்துக்கொள்ள இயலாது.

நமது ஜீவனின் அடைவிடம் கிறிஸ்துவே. நாம் நம் ஜீவனைக் கிறிஸ்துவுக்குள்ளே வைத்திருந்தால் அதனை திரும்ப பெறவியலும். கொலோோசெயர் 3:3. ஏனெனில் நம் ஜீவனை நாம் மண்பானையில் பெற்றுள்ளோம். பாவம் இந்த மண்பானையை சேதபடுத்துவதினாலும். இந்த மண்பானையை விடுத்து வேறு நல்லதொரு மகிமையின் சரீரத்தை பெறவேண்டியிருப்பதினாலும் நாம் நம் ஜீவனை இயேசுவிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். அவர் மட்டுமே நம் ஜீவனின் உத்திரவாதி.

நாம் நம் ஜீவனை மண்பானையில் பெற்றிருந்தாலும் நமது ஜீவன் கீரீஸ்துவின் இரத்தத்துக்குள் மறந்திருக்குமானால் சாத்தானோ, பாவமோ, உலகமோ, வேறு எதுவோ நமது ஜீவனை பறித்துக்கொள்ளவியலாது. மத்தேயு 10:28 ல் ஆத்துமாவை கொல்லுவதற்கும், பறித்துகொள்ளுவதற்கும் இயேசுவை தவிர எந்த சாமிகளுக்கும், பூதங்களுக்கும், மாம்சங்களுக்கும் அதிகாரமும் இல்லை, வல்லமையும் இல்லை. இவர்களெல்லாம் பாவ சரீரத்தை மட்டுமே கொல்லுவதற்கும், உபாதிக்கிறதற்கும் இயலும். எனவே, உங்கள் ஜீவன் கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்க போராடுங்கள்.

கிறிஸ்து உலகத்தாலும், மாம்சத்தாலும் கொல்லப்பட்டிருந்தாலும் எல்லா மனிதரின் தலையெழுத்தும், தலை கொழுப்பும் அவரிடத்தில் இருக்கிறது. இந்த கல்லின்மேல் மோதுகிறவன் நொறுங்கிப்போவான், இல்பொருளாகிப்போவான். எனவே பயமில்லாது கிறிஸ்துவை பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்கள் ஜீவனின் காவலாளி.

கர்த்தாவே சரீரத்தையல்ல ஆத்துமாவை கொல்ல வல்லமையுள்ளவராகிய உமக்கு பயந்து வாழ உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME