ஒன்றும் சேதமாய்ப் போகாதபடி மீதியானவைகளை சேர்த்துவையுங்கள்.
Jesus took the loaves,and when He had given thanks He distributed them to the disciples. (John 6:12,13)
Mt14;18,19; Mt15:35,36; Mk6:39-41; Mt8:6,7; Lk9:14-16; Lk24:30; Act27:35; Ro14:6; 1Co10:31; 1The5:18; 1Tim4:4,5; 1Sa9:13.
அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஜந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். (யோவான் 6:12,13)
உபாகமம் 8:1-10; ரூத் 2:18; 2 இராஜாக்கள் 4:6; 2நாளாகமம் 25:9; நெகேமியா 8:10; நெகேமியா 9:25; சங்கீதம் 112:5-10; நீதிமொழிகள் 11:24,25; 2கொரிந்தியர் 9:8,9; பிலிப்பியர் 4:19;(லூக்கா 15:13; லூக்கா 16:1).
மீதியானது:
5+2 ல் ஏராளமாய் மீதியானது.
எப்படி மீதியானது?
ஜனங்கள் திருப்தியானபின்பு மீதியானதை வீட்டிற்கு எடுத்து செல்லாமல் வீதியில் போட்டுவிட்டார்கள். இயேசுகிறிஸ்துவோ அவைகளை சேர்க்கும்படி சீஷர்களுக்கு கட்டளையிட்டார். ஏறக்குறைய 12 கூடைகள் நிறைய சேர்த்தார்கள்.
எதற்காக சேர்த்துவைக்கக்க் கூறினார்?
ஒருசாரார்…
இயேசுவை பின்பற்றும் சீஷர்கள் குடும்பத்திற்காக.
அப்படியென்றால் சபையிலே எல்லா தேவையும் பூர்த்தியானபின்புதான் ஊழியகாரர்கள் மீந்ததில் எடுத்துகொள்ளவேண்டும் என்றாகும்.
இன்னொருசாரார்…
கொடுத்த சிறுபையனுக்காக சேர்த்து வைத்தனர்.
அப்படியென்றால் சபையில் உதவி செய்பவர்கள் மீந்தவைகளினால் நிரப்பபட வேண்டியதாகின்றது.
இன்னும்சிலர்…
அடுத்த இடத்தில் உள்ள திருப்பணிக்காக.
அப்படியென்றால் ஊழியத்தில் மீதியானதைகொண்டு அடுத்த ஊழிய பணியை நிறைவேற்றவேண்டும் என்றாகிறது.
வேறுசிலரோ….
எளியவர்களுக்காக.
அப்படியென்றால் சபை தன்னிடம் மீதி இருப்பதைகொண்டு எளியவர்களை போஷிக்க கடனாளியாயிருக்கிறது என்றாகிறது.
இந்த வசனத்தில் உள்ள சில உண்மைகளை நாம் அறிந்திருப்பது நல்லது.
1. மீதிவராமல் கவனித்துகொள்வது நல்லது.
2. மீதி வந்ததை வீதியிலோ, குப்பையிலோ போடாமலிருப்பது நல்லது.
3. மீதியானதை எளியவர்க்கு கொடுத்து உதவுவது நல்லது.
4. மீதியானதை சேர்த்துவைப்பது நல்லது.
5. மீதியானதைகொண்டு இல்லாததை நிரப்புவது நல்லது.
இந்த அற்புதத்தில் ஜனங்கள் மீதியானதை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டனர் – எறிந்து விட்டனர்.
நமது தேவனின் கிரியைகள் மட்டுப்படுத்தபட முக்கிய காரணம் மீந்தவைகளை செம்மையாக பயன்படுத்தாமையே காரணம்.
பெரிய குடும்பங்களிலும், சபைகளிலும், பெரிய ஊழியகாரர்கள் வாழ்விலும் மீதியாவதி தூக்கி எறியவும் செய்கின்றனர், சேர்த்துவைக்கவும் செய்கின்றனர்.
தங்கள் தேவைகளுக்கு போக மீதியுள்ளதை எளியவர்க்கும், எளிய சபைக்கும், எளிய ஊழியகாரர்க்கும் கொடுத்து உதவினால் இந்தியாவே நிரப்பபட வாய்ப்புண்டாகுமே.
சேர்த்ததின்மேல் சேர்க்கிறான்…
கட்டியதின்மேல் கட்டுகிறான்… விரிவாக்கியதை விரிவாக்குகிறான்…
நன்றாக சேர்த்துவை..
சிறியவர்க்காய் தாராளமாய் கொடு… இல்லையெனில் யாக்கோபு 5:1-3 ன் படியாகும்.
உன் அருகில் உள்ள எளியவர்களை, எளிய சபைகளை, எளிய ஊழியகாரர்களை கட்டி எழுப்புங்கள். கிறிஸ்துவின் இராஜ்ஜியம் விரிவாகட்டும்.
கர்த்தாவே, நீர் உம் மகன் மூலம் தந்த எல்லாவற்றிற்கும் நன்றி. நாங்கள் உண்மையாய் யாவர்க்கும் பகிர்ந்தளிப்போம் என்று நம்பி எங்களிடம் யாவையும் தந்தீர். நாங்கள் எங்கள் எளியவர்களை தேற்ற – ஆற்ற எங்களுக்கு நல்ல சிந்தையை தாரும்.