எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்க காத்தருளும்

எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்க காத்தருளும்.

Holy Father, keep through Your name those whom You have given Me,that they may be one as We are. (John 17:11)

John 17:12,15,21,22; John 10:29; John 14:20; Romans 15:5,6; 1Corinthians 1:10; 1Corinthians 12:12,13; Ephesians 4:4; 1Peter 1:5; Jude 1:1,24.

நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். (யோவான் 17:11)

யோவான் 17:12,15,21,22; யோவான் 10:29; யோவான் 14:20; ரோமர் 15:5,6; 1கொரிந்தியர் 1:10; 1கொரிந்தியர் 12:12,13; எபேசியர் 4:4; 1பேதுரு 1:5; யூதா 1:1,24.

ஒன்றாயிருக்க காக்கப்பட்டுள்ளோம்:

கர்த்தர் நமது கையில் தந்துள்ள விவிலியத்தில் காணப்படுகின்ற வாக்குறுதிகளில் அதிகமானவை இஸ்ராயேலருக்கு தான் என்பதை நாமறிவோம். சிலவாக்குறுதிகள் புறஜாதிகளிலிருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிற விசுவாசிகளாகிய நமக்கும் உரியதாயுள்ளது. இஸ்ராயேலர்கள் ஒன்றித்திருந்து வாக்குறுதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். கிறிஸ்துவின் வழியாக அவர்களின் வாக்கை பெறுகின்ற நாமும் கூட அதே நோக்கத்துக்குரியவர்களே. அவருடைய வசனம், அவருடைய ஆவி, அவருடைய வாக்குறுதிகள் யாவும் நாம் ஒன்றாயிருக்கவே கொடுக்கப்பட்டதாகும். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களின் ஒன்றிப்பே சபைகளின் ஒருங்கிணைப்பு ஆகும்.

ஊழியக்காரர்கள் தேவனால் அறியப்பட்டு, முன்குறிக்கப்பட்டு, பிறப்பிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளவர்கள். அவர்களில் நடந்த கிரியைகள் யாவும் ஒன்றாகவே இருந்தது. அவர்களில் கிரியை நடப்பித்தவர் ஒரே ஆவியானவர், ஒரே கிறிஸ்து ஆவர். ஆவியும், கிறிஸ்துவும், பிதாவும் பிரிந்திருக்கவில்லையெனில் தேவனுடைய ஊழியக்காரர்களும் பிரிந்திருக்கலாகாது. வரங்கள் வேறுபட்டிருக்கலாம். கிரியைகள் வேறுபட்டிருக்கலாம். ஊழியங்கள் வேறுபட்டிருக்கலாம். வெவ்வேறான நிறம், மொழி, இனம், நாடு ஆக இருந்தாலும் எல்லா ஊழியக்காரர்களும் யாதாவது ஒரு முறையில் அவரின் இராஜ்யத்துக்காய் உழைக்கிறவர்கள். ஊழியக்காரர்களுக்குள் உள்ள வரவேறுபாடு, திறமை வேறுபாடு, பண வேறுபாடு, படிப்பு வேறுபாடு மறைந்தால் மட்டுமே இவர்களால் இரட்சிப்புக்குள் நடத்தப்படும் தேவ மக்களும் ஒன்றித்து உழைக்க விரும்புவார்கள்.

இன்றைக்குள்ள அத்தனை பிரிவினைகளுக்கும், பொய் உபதேசங்களுக்கும், சபை பிரிவுகளுக்கும் முழு பொறுப்பு ஊழியகாரர்களே. ஏதோவொரு விதத்தில் மாம்சம், இச்சைகளின் கிரியைகளுக்கு உட்பட்டதினால் உண்டான வேறுபாடுகள் ஆகும்.

தேவனுடைய ஜனமே நாம் வெவ்வேறான களத்துமேடுகளில் வெவ்வேறான வேஷம் கட்டினவர்களாய் நின்றுக்கொண்டிருக்கலாம். நாம் புறத்தால் ஒன்றுபட இயலாததாயிருந்தாலும் உள்ளத்தால் ஒன்றுபட்டு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்காக உழைப்போம்.

பரிசுத்த ஆவியில் வேறுபாடு இல்லை.

ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. எபேசியர் 4:1-7.

ADD YOUR COMMENT

Powered By Indic IME