ஐசுவரியத்தில் மகிழ்ச்சியாயிருக்க அதிகாரம் தருவது தேவனுடைய அநுக்கிரகம்.
தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம். (பிரசங்கி 5:19)
பிரசங்கி 2:25,26; பிரசங்கி 3;13; பிரசங்கி 6:2; உபாகமம் 8:18; 1இராஜாக்கள் 3:13; 1 நாளாகமம் 29:12; யோபு 1:21; சங்கீதம் 128:2; நீதிமொழிகள் 21:20.
ஆனால்,
அது ஆத்துமாவை ஒருபோதும் இரட்சிக்காது.
அது தேவனண்டைக்கு வழிநடத்தாது.
அது பெருகினால் திங்கிறவர்களும் பெருகுவர்.
அது தேவனுக்கு உண்மையாயிருக்க விடாது.
அது இவ்வுலகோடு முற்று பெற வைக்கும்.
நாம் மகிழ்ச்சியாயிருக்கவே தேவன் ஐசுவரியத்தை தருகிறார்.
ஐசுவரியம் தனக்கு மகிழ்ச்சியை தரும்.அதை பிறருக்கும் பயன்படுத்தினால் பிறருக்கும் மகிழ்ச்சியை தரும்.