மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை காண்பீர்களானால்.
What then if you should see the Son of Man ascend where He was before? (John 6:62)
Jn3:13; Jn16:5,28; Jn17:4,5,11; Mk16:19; Lk9:51; Lk24:51; Act1:2,9; Eph4:8-10; 1Tim3:16; Heb9:24; 1Pet3:22.
மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? (யோவான் 6:62)
யோவான் 3:13; யோவான் 16:5,28; யோவான் 17:4,5,11; மாற்கு 16:19; லூக்கா 9:51; லூக்கா 24:51; அப்போஸ்தலர் 1:2,9; எபேசியர் 4:8-10; 1தீமோத்தேயு 3:16; எபிரெயர் 9:24; 1 பேதுரு 3:22.
ஏறிப்போகிற மனுஷகுமாரன்:
இயேசுகிறிஸ்து பூமியிலிருந்து உண்டானவர் அல்ல, விண்ணிலிருந்து வந்தவர்.
இயேசுகிறிஸ்து மனிதனைப்போல பிறந்தவர் அல்ல, ஜெநிப்பிக்கப்பட்டவர்.
இயேசுகிறிஸ்து மனிதனிலிருந்து வந்தவர் அல்ல, மனிதர்க்காக தேவனிடமிருந்து வந்தவர்.
இயேசுகிறிஸ்து பிதாவினால் உலகிற்கு அனுப்பப்பட்டவர். அவர் பிதாவினால் அனுப்பப்பட்டது உண்மையாயிருப்பதுபோல அவர் வந்த இடத்திற்கு பிதாவினால் எடுத்துக்கொள்ளப்படுவதும் உண்மையே.
வந்தவர் எதற்காய் வந்தவர் என்பதை 1தீமோத்தேயு 1:15ல் நாம் பார்க்கிறோம்.
ஏறிப்போகிறவர் எதற்காய் ஏறிப்போயிருக்கிறார் என்பதை எபேசியர் 4:8-10 லும், 1யோவான் 2;1 லும் நாம் பார்க்கிறோம்.
மேலும் ஏறிப்போயிருக்கிறவர் திரும்ப வந்து மணவாட்டி சபையை தம்மிடம் சேர்த்துக்கொள்வார்.
அவர் ஏறிச்சென்றிருப்பது – அவரை பிதாவானவர் எடுத்துகொண்டது நமக்குள் ஒரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஊட்டுகின்றது.
நாம் கைவிடப்படமாட்டோம்..
நாம் அவரிடமாய் சேர்க்கப்படுவோம்.
உலகில் பிறந்த எவரும் செய்திடாத மகாபெரிய காரியத்தை மனுஷகுமாரனாகிய இயேசு செய்திருக்கிறார், செய்யப்போகிறார். எனவே நம்பிக்கையுடையவர்களாய் முன்னேறுவோம்.
கர்த்தாவே நீர் உண்மையுள்ளவர், உம்குமாரனை அனுப்பி திரும்ப எடுத்துக்கொண்டீர். எங்களையும் நீர் உம் குமாரன் மூலமாய் உம்மிடம் சேர்க்க விரும்புகிறீர். உமக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் உண்டாவதாக.