எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட
Jesus said to him,Rise, take up your bed and walk. (John 5:8)
Mt9:6; Mk2:11; Lk5:24; Act3:8; Act9:34; Act14:10; Ps68:28; Pz127:3; Song4:16; Isa35:6; Isa52:1,2; Jer31:6; La2:19.
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். (யோவான் 5:8)
மத்தேயு 9:6; மாற்கு 2:11; லூக்கா 5:24; அப்போஸ்தலர் 3:8; அப்போஸ்தலர் 9:34; அப்போஸ்தலர் 14:10; சங்கீதம் 68:28; சங்கீதம் 127:3; உன்னதப்பாட்டு 4:16; ஏசாயா 35:6; ஏசாயா 52:1,2; எரேமியா 31:6; புலம்பல் 2:19.
எழுந்திரு:
இங்கே எழுந்து என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. எழுந்திரு என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன். இது ஒரு கட்டளைச்சொல்.
கர்த்தர் தாம் கூறிய இச்சொல்லை விவிலியத்தில் தேடி வாசிக்கலாம்.
1. யோசுவாவிடம் எழுந்திருக்க கூறினார். யோசுவா 7:10,13,16; யோசுவா 8:10.
2. பெண்களிடம் எழும்படி கூறுகின்றார். ஏசாயா 32:9.
3. தூசியை உதறி எழுந்திருக்க கூறுகின்றார். ஏசாயா 52:2.
4. கூப்பிடும்படி எழுந்திரு. புலம்பல் 2:19.
5. எசேக்கியேலிடம் எழும்படி கூறுகின்றார். எசேக்கியேல் 3:23.
6. பயத்தில் கிடந்தவர்களிடம் எழ கூறுகின்றார். மத்தேயு 17:7.
7. சிறுபெண்ணே எழுந்திரு. மாற்கு 5:41.
8. வாலிபனே எழுந்திரு. லூக்கா 7:14.
9. பேதுருவே எழுந்திரு. அப்போஸ்தலர் 11:7; அப்போஸ்தலர் 12:7.
கிறிஸ்துவின் சத்தத்தை கேட்காமலும், கேட்டு உணராமலும் இருக்கிற மனிதர்க்கு தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க கூறுகின்றார். ரோமர் 13:11; எபேசியர் 5:14.
எழுந்திரு உன் படுக்கையை எடுத்துகொண்டு நட.
இச்சொல் சில முக்கிய காரியங்களை நமக்கு கற்பிக்கின்றது.
1. தூக்க மயக்கம். மனிதர்க்கு தரப்பட்டுள்ள தூக்க நேரம் இரவு 9முதல் காலை 5 வரையிலும். இதை தவிர செய்வதெல்லாம் தூக்கமயக்கத்தின் விளைவே. இது ஆகாது.
2. படுக்கையானது தூங்கவும், வியாதியில் பெலனற்று கிடப்போருக்கும் பயன்படுகின்றது. அதன் நேரம் கடந்து அது மடித்து போடப்பட வேண்டும்.
3. இது கீழ்படிதலை குறிக்கின்றது.
4. இது சரீரத்திலும், ஆன்மாவிலும் பெலனடைவதை குறிக்கின்றது.
5. இது செயல்படுதலை குறிக்கின்றது.
கிறிஸ்தவ வாழ்க்கை தேங்கும் நீரல்ல, பாய்ந்தோடும் நீர்.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தொடரோட்டம். அது தடைப்படலாகாது. பலவீனத்திலும் தொடர வேண்டும்.
கிறிஸ்தவ வாழ்க்கையை அவர்தான் இயக்குகின்றார். காலம் வருவது வரையிலும் இயங்கிகொண்டேயிருக்க வேண்டும்.
இன்றைய கிறிஸ்தவம் தூசியிலிருந்தும், தூக்கத்திலிருந்தும் விழித்து நிற்க வேண்டிய கட்டாயம் பெற்றுள்ளது.
கர்த்தாவே, முடங்கி கிடந்த எனக்கு பெலன் தந்து, தைரியம் தந்து எழும்பி நடக்க வைத்தீர். இனி நான் பணத்துக்கும், புகழுக்கும், பதவிக்கும், மற்றுள்ள அழிவின் காரியங்களுக்கும் நேராய் நான் ஓடாதபடிக்கு உம்மிலே, உமக்காய், உம்மோடு இணைந்து ஓட எனக்கு உதவி செய்யும். உம் இராஜ்ஜியம் நான் வருவது வரையிலும் என் ஓட்டம் தடைப்படாமலிருக்க எனக்கு உதவிடும். பலவீனங்கள். போராட்டங்கள் கண்டு துவண்டு விடாமலிருக்க எனக்கு உதவி செய்யும்.