எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்

எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்

Beloved, do not believe every spirit, but test the spirits, whether they are of God; (1John 41)

Deu 13:1-5; Proverbs 14:15; Jermiah 5:31; Jermiah 29:8,9; Matthew 7:15,16; Matthew 24:4,5; Acts 17:11; Romans 16:18,19; 1Thesolonians 5:21; 2Peter 2:1; Revalation 2:2,3.

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். (1 யோவான் 4:1)

உபாகமம் 13:1-5; நீதிமொழிகள் 14:15; எரேமியா 5:31; எரேமியா 29:8,9; மத்தேயு 7:15,16; மத்தேயு 24:4,5; அப்போஸ்தலர் 17:11; ரோமர் 16:18,19; 1தெசலோனிக்கேயர் 5:21; 2பேதுரு 2:1; வெளி 2:2,3.

சோதித்தறியுங்கள்.

சோதித்தறிதல் என்பது நமது வாழ்க்கையில் சாதரணமாக பயன்படுத்தக்கூடிய சொல்லே. சிலரில் இயல்பாகவே இந்தக் குணம் உண்டு. சிலர் கல்வியறிவினால் இதனைப்பெற்றுள்ளார்கள். வேறு சிலரோ எவ்விதத்திலும் இத்தன்மையில்லாதவர்களாய் குழந்தையைப்போல நம்புகிறவர்களாயிருப்பர். தேவன் தமது ஆவியை கொடுத்திருப்பதின் நோக்கமே சகலவற்றையும் நிதானித்தறிவதற்காகவேயாகும். பாவம் நிறைந்த உலகில் பிசாசுகளின் ஆவிகளின் மாய்மால தோற்றங்களும் கிரியைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. கொரோனா வைரஸின் உருமாறும் தன்மையைப்போல பிசாசுகளின் செயற்பாடுகளும் காணப்படுகின்றது. பிசாசுகளின் ஆவிகளைவிட மாம்சீகத்தின் ஆவிகளின் மாறுபட்ட தன்மைகள் இக்காலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு சுமார் 10 வருடங்களாக ஆவிகளின் பல்வேறுபட்ட செயற்பாடுகள் தேசத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவைகளை சோதித்தறிவது தேவனுடைய பிள்ளைகளின் அவசியமாகும்.

கிறிஸ்தவ உலகத்திலும் இயேசுவின் காலத்திற்கு பின்பதாக – அப்போஸ்தலர்களின் காலங்களின் பாதிகாலங்களிலிருந்தே சபைகளிலும், தேவனுடைய மனிதர்களிடையிலும் ஆவிகளின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. பவுலும் இத்தியாதி நிலைமை உண்டாகும் என்று அப்போஸ்தலர் 20:28-31 ல் தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளார். பவுல், பேதுரு, யூதா போன்றவர்கள் இவைகளின் ஆதிக்கத்தைக் குறித்து அறிந்திருந்ததினால் சபைகளை எச்சரித்தார்கள். 2தீமோத்தேயு3, 2பேதுரு 2, யூதா1.

தேவன் தமது ஆவியைக் கொடுத்து ஆவிகளை பகுத்தறியும் வரத்தையும் கொடுத்துள்ளார். யோவான் சொல்லுகிறார் எல்லா ஆவிகளையும் நம்பாதிருங்கள். இந்த எச்சரிக்கை இக்கால சபைகளுக்கும் பொருந்துகிறது. பல்வேறுபட்ட ஆவிகளின் உருமாறிய தோற்றங்கள் சபை பிரிவுகளாக, மாறுபட்ட உபதேசங்களாக சபைகளுக்குள் உலாவுகின்றது. தனி ஜெபங்களும், விவிலிய தியானமும் வெகுவாகவே குறைந்து போனதினிமித்தம் நூதனமான உபதேசங்களையும் பழக்கங்களையும் கொண்டு வருகிற அந்நிய அக்கினியையும், அந்நிய ஆவிகளையும் அறிய இயலாமல் அவைகளுக்கு அடிமையாகிப்போகிறார்கள்.

எல்லா வரங்களையும் பின்பற்றும்படி போதிக்கிற தேவனுடைய மனிதர்கள் ஆவிகளை பகுத்தறியும் வரத்தைக் குறித்து போதிப்பதும் இல்லை, கற்பிப்பதும் இல்லை, இந்த வரத்துக்காய் ஜெபிப்பதும் இல்லை. 25 வருடங்களுக்கு முன்பதாக இந்த வரம் குறித்து ஊழியர்களிடையில் அதிகமாய் அனுமானிக்கப்பட்டது. ஆனால் இக்காலங்களில் அவைகளை பகுத்தறியும் வரம் குறித்து தியானிப்பதும், வாஞ்சிப்பதும், பயன்படுத்துவதும் இல்லை. ஒரு ஊழியரில் இந்த வரம் செயல்படுமானால் தன் சபையில் காணப்படும் விசுவாசிகளில் காணப்படும் தாறுமாறுகளின் ஆவியை அறிந்து அவைகளை கடிந்துக் கொள்கிறவனாகவும், கண்டிப்பின் செய்தியை அவ்வப்போது பகிர்ந்துக் கொள்கிறவனாகவும் காணப்படுவான்.

ஆவிகளை பகுத்தறிய பல்வேறுபட்ட வழிமுறைகளை ஆவியானவர் கொடுத்துள்ளார். ஆறு மிகவும் முக்கியமானதாகும். ஐசுவரியம் குறித்த வாஞ்சை – பொருளாசை, எதிர்பாலரோடு அதிகப்படியான பழக்கம், செய்வதையும் சொல்வதையும் மறைத்துக் கொள்ளும் ஆவல் – வெளிப்படை தன்மை இல்லாமை – சூதுவாது, அந்நிய தெய்வங்கள் சம்பந்தப்பட்டவைகளுடன் தொடர்பிலிருத்தல், எதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மை – நடுநிலை நிற்க முயற்சித்தல் ஆகும்.

கேள்வி. உங்களில் இருக்கும் ஆவியை குறித்து நீரும், பிறரும் அறிந்திருப்பது என்ன?

உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப் பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக. உபாகமம். 13:1-5.

ADD YOUR COMMENT

Powered By Indic IME