உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
He who comes from above is above all.He who comes from heaven is above all. (John 3:31a)
Jn1:15,27,30; Jn3:13; Jn5:21-25; Jn6:33,51; Jn8:23; Jn16:27,28; Mt28:18; Ro9:5; Eph1:20,21; Eph4:8-10; Phi2:9-11; 1Pet3:22; Rev19:10.
உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். (யோவான் 3:31)
யோவான் 1:15,27,30; யோவான் 3:13; யோவான் 5:21-25; யோவான் 6:33,51; யோவான் 8:23; யோவான் 16:27,28; மத்தேயு 28:18; ரோமர் 9:5; எபேசியர் 1:20,21; எபேசியர் 4:8-10; பிலிப்பியர் 2:9-11; 1பேதுரு 3:22; வெளி 19:10.
இயேசு மேலானவர். எப்படி?
1. அவர் வார்த்தையாயிருந்ததினால். யோவான் 1:1.
2. அவர் ஞானமாய் இருந்ததினால். 1கொரிந்தியர் 1:31;நீதி8:30.
3. தேவ குமாரனாய் இருப்பதினால். ரோமர் 1:5.
4. பிசாசுகளும், அசுத்த ஆவிகளும் அவரை கண்டு அஞ்சி நடுங்குவதினால்.
5. உலகம், மாமிசம், மனிதர் ஆகிய யாவும் அவரை கண்டு அச்சபடுவதினால்.
6. பழைய ஏற்பாட்டு விவிலியம் இயேசுவை குறித்து தெளிவாக கூறுவதினால்.
7. உலகில் உள்ள எந்த மத நூல்களிலும், இதர நூல்களிலும், ஏடுகளிலும் அறியபடாதவராயிருப்பதினால். விவிலியத்துக்கு வெளியே எப்பொழுதும், எங்கேயும், எவரிலும், எதிலும் கிறிஸ்துவை குறித்து வெளிப்பாடுகள் இல்லை.
இயேசு மேலானவர்.
– நமது உள்ளங்களிலும் மேலானவே.
– நமது முயற்சிகளிலும் மேலானவர்.
– நமது ஞானம், அறிவுகளிலும் மேலானவர்.
– நமது திறமைகள், தாலந்துகளிலும் அவர் மேலானவர்.
– நமது செல்வம், அழகு, அந்தஸ்து யாவிலும் அவர் மேலானவர்.
இந்த மேலானவரை விட்டுவிட்டு அழிவின் ஏதுக்கள்மேல் கவனம் செலுத்தாது அவரையே நோக்கிப் பார்ப்போம்.
ஏறிச்சென்றவரை ஏறிட்டுப்பார். ஏற்றுக்கொள்.
கர்த்தாவே, நீர் உமது குமாரனை மிகவும் உயர்ந்தவராய் வைத்திருந்தும் உம்மைபோல உமது குமாரனும் எளியவர்களும், அறிவீனர்களுமாகிய எங்கள் மேல் கண்ணோக்கமாய் இருக்க வைத்ததற்காய் நன்றி. நாங்கள் எல்லாவற்றிலும் அவரை உயர்த்தி வாழ கிருபை தாரும்.