எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய் கிடந்தான்
அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான், அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப்போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான். (2 இராஜாக்கள் 13:14)
2 இராஜாக்கள் 20:1; சங்கீதம் 12:1; ஏசாயா 57:1; எசேக்கியேல் 14:13-20; சகரியா 1:5,6; அப்போஸ்தலர் 13:36; மாற்கு 6:17-29; 1 யோவான் 5:16,17.
அபிஷேகம் பெற்ற தேவ மனிதன் வியாதிகளினூடே கடந்து செல்ல வேண்டுமா?..
எலிசா வியாதிகளினூடே கடந்து சென்றான். ..ஆனால் தேவ வல்லமை வெளிப்பட வியாதி தடையாக இருக்கவில்லை. 2இராஜாக்கள் 13:20,21….
யோபு வியாதிகளினூடே கடந்து சென்றான். ..ஆனால் தேவ ஐக்கியம் வெளிப்பட வியாதி தடையாக இருக்கவில்லை. யோபு 19:25-27…
பவுல் வியாதிகளினூடே கடந்து சென்றான். ..ஆனால் தேவ பணி செய்வதற்கு வியாதி தடையாக இருக்கவில்லை. 2கொரிந்தியர் 12:7-10…
எப்பாபிரோதீத்து வியாதிகளினூடே கடந்து சென்றான். ..ஆனால் தெய்வ வாஞ்சை கொள்வதற்கு வியாதி தடையாக இருக்கவில்லை. பிலிப்பியர் 2:25-28….
ஜெபிக்க….
துதிக்க….
தியானிக்க…..
ஆவிக்குரிய வாழ்வு வாழ. …
கிறிஸ்தவ ஐக்கியத்தை மெருகேற்ற. …
அன்புகூருவதற்கு…..
நற்கிரியைகள் செய்வதற்கு….வியாதி ஒரு தடையில்லை…..