என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்

என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

I am going to the Father,’ for My Father is greater than I. (John 14:28)

John 10:30; John 13:16; John 20:21; Matthew 12:18; 1Corinthians 11:3; 1Corinthians 15:24-28; Philippians 2:6-11; Hebrew 1:1-3; Hebrew 2:9-15.

நான் போவோன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். (யோவான் 14:28)

யோவான் 10:30; யோவான் 13:16; யோவான் 20:21; மத்தேயு 12:18; 1கொரிந்தியர் 11:3; 1கொரிந்தியர் 15:24-28; பிலிப்பியர் 2:6-11; எபிரெயர் 1:1-3; எபிரெயர் 2:9-15.

மேலான தேவன்:

நான் என் பிதாவினால் அனுப்பப்பட்டது போல இப்பொழுது நான் என் பிதாவிடம் செல்லுகிறேன். இதை குறித்து நீங்கள் வருத்தப்படுகிறவர்களாக அல்ல, சந்தோஷப்படுகிறவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். ஏனெனில் என்னை அனுப்பின பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

பெரியவராயிருக்கிறார் என்பதற்கான பொருளை சில வசனங்களைக் கொண்டு நாம் தியானிக்கலாம். மத்தேயு 11:11; மத்தேயு 12:6; மாற்்கு 4:32; லூக்கா 7:28; யோவான் 8:53; யோவான் 10:29; யோவான் 13:16; யோவான் 15:20. நான் பெரியவராய் இருக்கிற தேவனிடம் செல்லுவதினிமித்தம் நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். அவர் எல்லாரிலும் பெரியவராய் இருப்பதினால் எல்லாம் அவருக்கு அடங்கியே இருக்கும். அவரை தெய்வமாய் கொண்டிருப்பதும் அவரை பின்பற்றுவதும் அவருக்காய் வைராக்கியமாய் நிற்பதும் இதனாலேயே.

அடித்த தேவனிடம் திரும்பி வர வேண்டும் என்பது அவரின் விருப்பம். காயம் உண்டாக்கினவர் தான் சரியாக காயம் கட்ட முடியும். பூமி அழுவதற்கு (ரோமர் 8:19-22) காரணம் தேடாமல் அழுகையை நிறுத்துகிற தேவனிடம் மனந்திரும்பி மன்றாடி கெஞ்சி பார்ப்பதுவே வழி. ஏனெனில் அவர் பெரியவர்.

தேவன் தமது கோலால் பூமியை அடித்தார். அதனால் உண்டான புழுதியே பூமியெங்கும் கிருமிகளாய் மாறிவிட்டது. அடித்த அவரிடம் அவருடைய ஜனம் திரும்ப வேண்டும். ஏனென்று கேள்வி கேட்காமல் தங்களை தாழ்த்தி அவரிடம் திரும்பி வர வேண்டும். எக்காலமும் இல்லாமல் கைகளால் கட்டப்பட்ட தேவாலயங்கள் ஆள் அரவமின்றி முழு உலகிலும் பூட்டப்பட்டு கிடக்கின்றது. ஆயிரகணக்கான மந்தைகளை கொண்டிருந்த தேவ ஊழியகாரர்கள் மந்தைகளின்றி தவித்து நிற்கின்றார்கள். தேவன் தம்முடைய ஜனங்களை கைவிட்டாரோ? சத்துரு சபைகளின் மேல் கெர்ச்சிக்க அனுமதித்து விட்டாரோ? சங்கீதம் 74:2-12.

தமது புயத்தை மறுமுறை நீட்டுவாரானால் புழுதி அடங்கி எழுப்புதல் உண்டாகும்.

பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன். இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ? அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ? தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன். கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். தேவனே, உமது வழி பரிசுத்தஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே, ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர். சங்கீதம் 77:5-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME