என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் விசுவாசிக்க வேண்டாம்

என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் விசுவாசிக்க வேண்டாம்.

If I do not do the works of My Father, do not believe Me. (John 10:37)

Mt11:20-24; Mk16:16; Jn3:18,36; Jn5:40,42-47; Jn6:60,64; Jn9:4; Act2:22-24; Ro10:14; 1Jn5:10; Jude1:5.

என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. (யோவான் 10:37)

மத்தேயு 11:20-24; மாற்கு 16:16; யோவான் 3:18,36; யோவான் 5:40,42-47; யோவான் 6:60,64; யோவான் 9:4; அப்போஸ்தலர் 2:22-24; ரோமர் 10:14; 1யோவான் 5:10; யூதா 1:5.

விசுவாசியாத மனம்.
விசுவாசம் என்பது கிறிஸ்துவை தன்னில் கொண்டிருப்பதும், கிறிஸ்துவோடு நடப்பதுமாகும். இயேசுகிறிஸ்துவினால் செய்யப்பட்ட பலத்த கிரியைகளை அனுபவித்தும், பார்த்தும் இருந்த இஸ்ராயேலர்கள் அவரை கிறிஸ்து என்றும், தேவ குமாரன் என்றும் விசுவாசிக்க மறுத்தார்கள். பழைய ஏற்பாட்டில் விசுவாசியாத இஸ்ராயேலர்களை தேவன் அழித்தார் என்று யூதா கூறுகின்றார். இந்நிகழ்வுகளை தோரா புத்தகங்களில் நாம் வாசிக்கின்றோம். புதிய ஏற்பாட்டிலும் இவ்விதமான வேதனை மிகுந்த காரியம் வைக்கப்பட்டுள்ளதை 2தெசலோனிக்கேயரில் காண்கின்றோம். 1:7-10.

கிறிஸ்துவையும் அவரது வார்த்தைகளையும் அவரது கிரியைகளையும் விசுவாசியாதவர்கள் நிலை குறித்து பு.ஏ கூறுவதை கவனிப்போம்.

விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான். மாற்கு 16:16.
விசுவாசியாதவர் ஆக்கினைதீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:18.
விசுவாசியாதவன் ஜீவனை காணமாட்டான். யோவாான் 3:36.
விசுவாசிகளின், ஊழியகாரர்களின் கூட்டத்தில் விசுவாசியாதவர்களும் உண்டு. யோவான் 16:64.

அவரை விசுவாசியாதவர்கள் அவரை தொழுதுகொள்ள இயலாது. ரோமர் 10:14.
விசுவாசியாதவர் தேவனை பொய்யராக்குகிறார். 1யோவான் 5:10.

தேவனுடைய ஆவியினாலேயன்றி ஒருவரும் தேவனை விசுவாசிக்க இயலாது. மாம்சத்தின் ஆவி, பிசாசுகளின் ஆவி, உலகத்தின் ஆவி, இச்சைகளின் ஆவி உள்ள இடத்தில் தேவனின் ஆவி இருக்க இயலாது. தேவனின் ஆவி இல்லாததினால் இயேசுவை விசுவாசிக்க இயலாது.

பாவத்திலே வாழ்ந்துகொண்டு இயேசுவை விசுவாசிப்பதாகக் கூறுவது பொய்யாகும். பாவம் என்பது தேவனிடமிருந்து வெளியேறுவதாகும். எவரில் பாவம் காணப்படுகிறதோ அவர்கள் தேவனுடைய ஆளுகையைவிட்டு – ராஜாங்கத்தைவிட்டு – ராஜ்யத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். எனவே இவர்களில் விசுவாசத்தின் ஆவி இல்லை.
அன்பானவர்களே எதிர்மறையான வாழ்வை வாழ்ந்துகொண்டு விசுவாசத்தில் வளர இயலாது.
விசுவாசியாதவர்கள் அழிக்கப்படுவர்.

கர்த்தாவே உம்மை விசுவாசியாத இஸ்ராயேலர் அழிக்கப்பட்டார்கள். உமது மகனை விசுவாசியாத இஸ்ராயேலரும் இன்றுவரையிலும் ஆலயம் இன்றி உள்ளனர். அதைபோல விசுவாசியாத மக்கள் உமது கோபாக்கினைக்குள்ளாகாதிருக்க உமது இரக்கத்தை விசுவாசியாதவர்கள் மேல் ஊற்றும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME