பேதுரு:ஆண்டவரே, உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்.
Peter said to Him,Lord, why can I not follow You now? I will lay down my life for Your sake. (John 13:37)
Ruth 1:16; Matthew 26:31-35; Mark 8:34; Mark 14:27-31; Luke 22:31-34; John 11:16; John 21:15,19; Acts 12:1-3; Acts 20:24; Acts 21:13; Revelation 7:14; Revelation 6:9-11.
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்போன் என்றான். (யோவான் 13:37)
ரூத்1:16; மத்தேயு 26:31-35; மாற்கு 8:34; மாற்கு 14:27-31; லூக்கா 22:31-34; யோவான் 11:16; யோவான் 21:15,19; அப்போஸ்தலர் 12:1-3; அப்போஸ்தலர் 20:24; அப்போஸ்தலர் 21:13; வெளி7:14; வெளி 6:9-11.
என் ஜீவனையும் கொடுப்பேன்:
பேதுருவின் கூற்று ஆவேசத்தினால் உண்டானதோ இல்லையோ இயேசுகிறிஸ்து பேதுருவின் கூற்றை ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ பேதுரு தனக்குள் கிறிஸ்துவை நோக்கி கூறிய கூற்று உண்மையாகவே நடந்து கிறிஸ்துவுக்காக, அவரின் சுவிசேஷத்திற்காக தன் ஜீவனையும் கொடுத்தான் என்பதை சபை வரலாறு மறைக்கவும் இல்லை. திரித்து எழுதவும் இல்லை. ஆம் அவருக்காய் அவர் சுவிசேஷத்துக்காய் ஜீவனைக் கொடுத்தான்.
கிறிஸ்துவின் சிலுவையையும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் பல இடங்களில் குறிப்பாக யூதர்கள் மத்தியிலும் புற ஜாதியார் மத்தியிலும் சுமந்து சென்று தன் ஜீவனை இழந்தான். தன் ஜீவனைக் கொடுத்தான். தன் ஜீவனை ஒரு பொருட்டென்று எண்ணவில்லை. சவுகரியமாய் வாழ்வதைவிட சாவையே தெரிந்துக் கொண்டான். விருத்த சேதனத்தை பிரசங்கித்து ஜீவன் பெறுவதை விட்டுவிட்டு சிலுவையை பிரசங்கித்து ஜீவனை இழந்தான். பேதுரு மீன்களை பிடிக்கிற செம்படவன் அல்ல, மனிதர்களை பிடிக்கிற ஞானவான்.
இக்காலத்தில் சிலுவையின் செய்தியை மறைத்து செழிப்பின் செய்தியை பிரசங்கித்து பெரிய மனிதர்கள் என்ற பேர்பிரஸ்தாபம் அடைய விரும்புகிறார்கள். கிடைத்த பதவிகளை சிலுவையின் பிரதிபலிப்பாக பார்க்காது சிறப்பின் அம்சமாக பார்க்கிற பெரிய மனிதர்கள் மத்தியில் சிலுவையினை சுமக்கும் தோள்களாக தங்கள் வாழ்வை மாற்றியமைத்துக் கொண்டால் கிறிஸ்து மகிமைப்படுவார்.
ஐசுவரியத்திலும், பெரிய படிப்பிலும் , பெரிய பதவியிலும் , ஆடம்பர வாழ்விலுமல்ல எளிமையான வாழ்விலும் சிக்கனமான வாழ்விலும் கண்டிப்பான வாழ்விலும் சிலுவையை இன்முகத்தோடு சுமந்து செல்வதிலே தான் அவர் மகிமைப்படுகிறார்.
மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள். விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள். நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக. இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன். கலாத்தியர் 6:12-17.