தோமா: என் ஆண்டவரே, என் தேவனே என்றார்.
Thomas answered and said to Him,My Lord and my God!. (John 20:28)
John 5:23; John 9:35-38; Matthew 14:33; Luke 24:52; Acts 7:59,60; 1Timothy 3:16; Revelation 5:9-14; Psalms 45:6,11; Psalms 102:24-28; Psalms 118:24-28; Isaiah 40:9-11.
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். (யோவான் 20:28)
யோவான் 5:23; யோவான் 9:35-38; மத்தேயு 14:33;லூக்கா 24:52; அப்போஸ்தலர் 7:59,60; 1தீமோத்தேயு 3:16; வெளி 5:9-14; சங்கீதம் 45:6,11; சங்கீதம் 102:24-28; சங்கீதம் 118:24-28; ஏசாயா 40:9-11.
விசுவாச அறிக்கை.
ஆண்டவரே என்பதற்கு குரியோஸ் என்றும், தேவன் என்பதற்கு தியோஸ் என்றும் கிரேக்க மொழியில் பகிரப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நம்பாத தோமா உயிர்த்த இயேசுவை கண்டவுடன் அவரை கர்த்தாவாகவும், தேவனாகவும் அறிக்கை செய்தார். இந்த கூற்றில் 3 முக்கியமான விஷயங்களை தோமா வெளிபடுத்துகின்றார். முதலாவது, நான் நம்புகிறேன் என்பதாகும். நாசரேத்தூர் இயேசுவே ஆண்டவர், நாசரேத்தூர் இயேசுவே மரித்தும் அடக்கம்பண்ணப்பட்டும் உயிரோடிருக்கிறவர். நாசரேத்தூர் இயேசுவே தேவனாயிருக்கிறார். இவ்வித விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார் தோமா.இரண்டாவது, நான் அறிக்கையிடுகிறேன் என்பதாகும். என் தனிபட்ட வாழ்வில் நான் அவரை ஆண்டவராகவும், தேவனாகவும் அறிக்கையிடுகிறேன். நான் நம்பாதிருந்ததை இப்பொழுது நம்புவதாக அறிக்கையிடுகிறேன். நான் சந்தேகித்ததை அறிக்கையிடுகிறேன். நான் நம்புவதையும் அறிக்கையிடுகிறேன்.
மூன்றாவது, நான் அவரை குறித்து சாட்சி சொல்லுகிறேன் என்பதாகும். மரித்தவரே உயிர்த்தார். உயிர்த்தவரே ஜீவிக்கிறார். ஜீவிக்கிறவரே ஜீவன் கொடுப்பவர். என்னை போல சந்தேகபடுகிறவர்களும், விசுவாசிக்காதவர்களும் இயேசுவை ஆண்டவராகவும், தேவனாகவும் ஏற்றுக்கொள்ள நான் சாட்சியாயிருக்கிறேன்.
தோமாவைபோல நமது விசுவாசத்தை வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். தேவனுடைய மனிதர்கள் தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும். பாவங்கள், தவறுகள், குற்றங்கள், பிழைகள் நம்மை நிர்வாணப்படுத்தி தேவன் முன்பாக வெளியரங்கமாக்கும் என்பதினால் அவைகளை ஒத்துக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். வெளியரங்கமான தவறுகள் வெளியரங்கமான ஒத்துக்கொள்ளுதலையும், அந்தரங்கமான தவறுகள் அந்தரங்க ஒத்துக்கொள்ளுதலையும் கேட்கும். தேவனுடைய மனிதர்கள் இயேசுகிறிஸ்துவை மட்டுமே மையமாகக்கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது உள்ளமும், மனமும் தேவனுக்குரியதாகக் காணப்படும். அவரை ஆண்டவராக கொண்டிருந்தால் அவரே நம்மை கட்டுபடுத்தும்படி அவரிடம் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். தேவனுடைய மனிதர்கள் இயேசுவை அறிவித்தலில் இணக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அறிக்கைகளோடு இருந்தால் மட்டும் போதாது – ஜெபதியானங்களோடு இருந்தால் மட்டும் போதாது. இயேசுவை ஆண்டவராகவும், தேவனாகவும் உலகிற்கு அறிவிக்க வேண்டும். அறிவித்தல் இல்லாமல் சுவிசேஷம் பூரணபடுவதில்லை. சுவிசேஷம் பூரணபடாமல் இரட்சிப்பு பூரணமாகாது. சிலரையாவது எரிகிற அக்கினிக்கு தப்புவிக்க நமது விசுவாசத்தையும், நம்பிக்கையையும் பயன்படுத்துவோமாக.
தவறு செய்த தோமாவிலிருந்து உன்னதமான அறிக்கையை கொண்டுவந்தார் இயேசு கிறிஸ்து.
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே. ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன். நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணாமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன். 1கொரிந்தியர் 9:16-23.
சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபு 5:19,20.