என்னைத் தேடுவீர்கள், நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது.
You will seek Me; and as I said to the Jews,Where I am going, you cannot come,so now I say to you. (John 13:33)
John 7:33,34; John 8:21-24; John 14:4-6; John 16:19; Luke 5:35; Luke 13:24; Luke 17:22.
பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். (யோவான் 13:33)
யோவான் 7:33,34; யோவான் 8:21-24; யோவான் 14:4-6; யோவான் 16:19; லூக்கா 5:35; லூக்கா 13:24; லூக்கா 17:22.
நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது.
கர்த்தராகிய இயேசு மூன்று காரியங்களைக் குறிப்பிடுகின்றார். முதலாவது, என்னைத் தேடுவீர்கள் என்பதாகும். கொஞ்ச நாட்கள் தாண்டி நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆமோஸ் ஆண்டவரை தேடும்படியாய் கூறுகின்றார். ஏசாயா கர்த்தரை கண்டடையதக்க சமயத்தில் அவரை தேடும்படி கூறுகின்றார். இயேசு தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் என்றார். நீதிமொழிகள் அதிகாலையில் அவரை தேடும்படி கூறுகின்றது. ஆனால் சீஷர்களாகிய நீங்கள் என்னைத் தேடுவீர்கள் என்கிறார். காணக்கூடாததும் ஒருவரும் சேரக்கூடாததுமான இடத்துக்கு செல்வதினால் அவரை தேட வேண்டியதாகின்றது.
2வது, நான் ஒரு இடத்துக்கு போகிறேன் என்பதாகும். முன்னர் கண்டதின்படி மனிதர்களால் அறிய முடியாத இடத்துக்கு அவர் செல்ல போகிறார். பிதாவினிடத்திலிருந்து வந்தவர் பிதாவினிடமே போகிறார். இது மரணத்தைக் குறிப்பதாக அல்ல, உயிர்த்து, பரமேறி பிதாவிடம் செல்வதைக் குறிக்கின்றது.
3வது, நீங்கள் வர்க்கூடாது என்பதாகும். அவர் செல்லுகிற இடத்துக்கு சீஷர்களாகிய நீங்கள்வரக்கூடாது என்கிறார். கர்த்தராகிய இயேசு பிதாவோடு இருக்கின்ற இடத்துக்கும் அந்த நிலைக்கும் நாம் செல்ல முடியாது. ஆனால் நாம் அவரோடு இருக்கும்படியாகவும், அவர் நம்மோடு இருக்கும்படியாகவும் அவரிடத்தில் ஓரிடமுண்டு. அங்கே நாம் அவரை சந்திக்க முடியும். அவரும் நம்மை சந்திப்பார்.
நாம் இயேசுகிறிஸ்துவோடு இருப்பதற்கு நமக்கு அருள் செய்யப்பட்டுள்ளது. இயேசுவை ஏற்றுக்கொண்டு, திருமுழுக்கு பெற்று, பரிசுத்த ஆவியின் நிறைவை அடைந்து தூய வாழ்க்கை வாழும்போது அவரோடு இருப்போம்.
அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1தெசலோனிக்கேயர் 4:13-17.