என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
And he who sees Me sees Him who sent Me. (John 12:45)
John12:41; John14:9,10; John15:24; 2Cor4:6; Col11:15; Hebrew1:3; 1John5:20; Luke23:39-43.
என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். (யோவான் 12:45)
யோவான் 12:41; யோவான் 14:9,10; யோவான் 15:24; 2கொரிந்தியர் 4:6; கொலோசெயர் 1:15; எபிரெயர் 1:3; 1யோவான் 5:20; லூக்கா 23:39-43.
காணும் கண்கள்:
கர்த்தராகிய இயேசு மூன்று வார்த்தைகளை அடிக்கடி கூறியுள்ளார். என்னை விசுவாசிக்கிறவன் என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறான். என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறான். என்னை காண்கிறவன் என்னை அனுப்பினவரை காண்கிறான் என்பதாகும். காணக்கூடாத தேவனை அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் காணும்படியாக தேவனால் அனுப்பப்பட்டு வந்த இயேசுவை அறிய வேண்டும். இயேசுவை வெறும் மனிதகுமாரனாக காண்கிறவர்கள் தேவனை அறியமாட்டார்கள். இயேசுவை வெறும் தேவகுமாரனாக காண்கிறவர்கள் இயேசுவையும் அறியார் தேவனையும் அறியமாட்டார்கள். கர்த்தராகிய இயேசு தேவனால் அனுப்பப்பட்டு வந்தவர் என்பதற்குரிய அடையாளமே அவருடைய தோற்றமும் அவருடைய தன்மைகளும் அவருடைய கிரியைகளும், அவருடைய உபதேசங்களுமாகும். ஒருவரில் தேவனோ தேவனின் ஆவியோ இல்லாவிட்டால் ஒருவரும் தேவனுக்குரியவைகளை அறியவும் முடியாது, தேவனை அறியவும் முடியாது.
இயேசுவை காணும் கண்கள் இஸ்ராயேலருக்கு இல்லாது போனதினால் அவரால் அனுப்பிய தேவனையும், தேவனால் கொடுக்கப்பட்ட நியாயபிரமாணங்களையும், நியாயபிரமாணங்களை பெற்றுவந்த மோசேயையும் அறியாதும் விசுவாசிக்காதும் போனார்கள். தேவனுடைய ஆவியினாலேயன்றி இயேசுவை இன்னார் என்று ஒருவராலும் அறியமுடியாது. மனித ஆவிகள், பிசாசின் ஆவிகள், உலகத்தின் ஆவிகள், மாம்சத்தின் ஆவிகள் கொண்ட மனிதர்களுக்குள் பிறந்த இயேசுவை இவ்வித ஆவிகளினால் அறியமுடியாது. தேவனுடைய ஆவியினால் மட்டுமே அவரை அறியமுடியும். கிறிஸ்துவை அறிகின்றவனே பிதாவை அறிகின்றான். கள்வன் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை வரப்போகிற இராஜாவாக கண்டதினால் அறிக்கையும் இட்டான், பரதீசையும் பெற்றான்.
ஆவியினாலேயன்றி இயேசுவை அறியமுடியாது. இயேசுவினாலேயன்றி பிதாவையோ, அவருடையவைகளையோ, சபையையோ, பரிசுத்த ஆவியையோ, வசனங்களையோ அறியமுடியாது.
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 1யோவான்4:1-3.