என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது
He who abides in Me, and I in him, bears much fruit; for without Me you can do nothing. ( John 15:5 )
John 5:19; John 9:33; Act 4:12; 1Corinthians 3:4-8; 2Corinthians 13:8; Philippians 4:13; Colossians 2:6,7; Colossians 3:11; 1John 2:5,6.
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
யோவான் 5:19; யோவான் 9:33; அப்போஸ்தலர் 4:12; 1கொரிந்தியர் 3:4-8; 2கொரிந்தியர் 13:8; பிலிப்பியர் 4:13; கொலோசெயர் 2:6,7; கொலோசெயர் 3:11; 1யோவான் 2:5,6.
ஒன்றும் செய்யக் கூடாது:
செடியில் நிலைத்திருந்தால்தான் கொடி மிகுதியான கனிகளைக் கொடுக்க முடியும் என்று கூறினார் இயேசு. என்னில் நிலைத்திராவிட்டால் அல்லது என்னை நிராகரித்து விட்டு உங்களால் கனியுள்ள வாழ்க்கை வாழவும் முடியாது, கனி கொடுக்கவும் முடியாது என்று கூறுகின்றார்.
என்னால் எல்லாம் செய்ய முடியும், உன்னால் எல்லாம் செய்ய முடியும் என்பது பெருமையின் வெளிப்பாடு. தன் பலத்தின் மீதும், தன் திறமைகள் மீதும், தன் படிப்பின் மீதும், தன் அந்தஸ்தின் மீதும், தன் செல்வத்தின் மீதும் வைத்துள்ள அதீத நம்பிக்கையின் விளைவு.
நெபுகாத்நேசேர் இவ்விதமாய் நடந்துகொண்டு முடிவில் தாழ்மையைக் கற்றுக் கொண்டார். புதிய ஏற்பாட்டில் பவுல் இவ்விதமாய் நடந்துகொண்டு முடிவில் இனி நானல்ல கிறிஸ்துவே என்னில் பிழைத்திருக்கிறார். என்னை பிழைத்திருக்க பண்ணுகிற தேவனாலே எல்லாவற்றையும் செய்ய பெலம் பெற்றுக்கொள்ளுகிறேன் என்றார்.
கிறிஸ்து இல்லாமல் வாழ்வதும் கூரையில்லாத வீட்டில் குடியிருப்பதும் ஒன்றே. வழி தெரியாத காட்டில் பயணம் செய்வதற்கு சமம். நாகரிக வளர்ச்சிகளும், அறிவு பெருக்கமும், பொருளாதார மேம்பாடும் மனிதர்கள் கிறிஸ்துவைக் குறித்து சிந்திக்கக்கூடாத இடத்துக்கு கொண்டு சென்று விட்டது. இவைகளெல்லாம் பாழ் நிறைந்த குடியிருப்புகளுக்கும் கொடுமை நிறைந்த காடுகளுக்கும் வழி நடத்தி அங்கே இவர்களை பரிதாபமாக விட்டு சென்றது.
இப்பொழுது சொல்கிறார்கள் நமது விஞ்ஞானம் நம்மை கைவிட்டது.
ஆம் கிறிஸ்து இல்லாமல் பாதி வாழ்க்கை நீ வாழலாம். மீதி வாழ்க்கை அவர் நம்மோடு இணைந்துதானாக வேண்டும், அவர் நம்மோடு நடந்துதானாக வேண்டும். அவரின்றி எதையும் சிந்திக்க வேண்டாம். அவரின்றி எதையும் செய்ய வேண்டாம். அவரின்றி வாழ்க்கை ஓட்டத்தில் ஓடாதே. அவரின்றி நானில்லை… நானின்றி அவருண்டு..
அவரை அடைவது வரையிலும் அவரை பின்தொடர். யாக்கோபை போல அவரை பிடி.. அவர் உனதாவார்….
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். எரேமியா 17:5-8.