பேதுருவே: என்னைப் பின்பற்றி வா.பேதுருவே: என்னைப் பின்பற்றி வா.

பேதுருவே: என்னைப் பின்பற்றி வா.

when He had spoken this, He said to him,Follow Me. (John 21:19)

John 21:22; John 12:26; John 13:36,37; Number 14:24; 1 Samuel 2:20; Matthew 10:38; Matthew 16:21-25; Matthew 19:28; Mark 8:33-38; Luke 9:20-26.

இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். (யோவான் 21:19)


யோவான் 21:22; யோவான் 12:26; யோவான் 13:36,37; எண்ணாகமம் 14:24; 1சாமுவேல் 12:20;மத்10:38;16:21-25;19:28; மாற்கு 8:33-38; லூக்கா 9:20-26. 

பின்பற்றிவா..
இன்றையதினம் விசுவாசிகள், ஊழியக்காரர்கள் என்ற இரு பகுதிகளின் அடிப்படையில் தியானிக்கின்றோம். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறவர்களை தம்மை பின்பற்றிவரும்படியாக மாத்திரமே கூறியுள்ளார். உலகை, மண்ணை, பொன்னை, மாம்சத்தை, அந்நிய தெய்வங்களை, சடங்காசாரங்களை பின்பற்றி பாவத்தோடு அனுதினமும் விளையாடி மரணத்துக்கு குறிக்கப்பட்டிருந்தவர்களை கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கவும், விசுவாசித்து பாவங்களை அறிக்கையிடவும், இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் இணைக்கப்படவும், அவருடைய ஆவியினால் நிரப்பப்படவும், கிறிஸ்துவை மட்டுமே பின்பற்றவும் அழைத்தார்.  இயேசுகிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் இயேசுவை மட்டுமே பின்பற்ற வேண்டும். மறுபடியும் தாங்கள் விட்டு வந்தவைகளை  வெறுக்கும்படி போதிக்கப்பட்டவைகளை பின்பற்றவோ, நேசிக்கவோ அதிகாரம் தரப்படவில்லை.

விசுவாசிக்கிறவர்கள் சீஷர்களாக பரிணாம வளர்ச்சியடையவே போதிக்கப்பட்டுள்ளார்கள். கட்சி அமைப்புகளில் சேரவோ, ஜாதி அமைப்புகளில் சேரவோ, பிறரை பகைக்கவோ, வெறுக்கவோ நாம் போதிக்கப்படவில்லை. இயேசுவை பின்பற்றி சீஷர்களாக்கப்பட்டவர்களே – சீஷத்துவத்தின் மாண்பை அறிந்தவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு தயாராகின்றார்கள். அப்படியிருந்தாலும் எல்லாரையும் பிரசங்கிக்கவும், மேய்க்கவும், போதிக்கவும், ஆளுகை செய்யவும் அழைக்கவில்லை. அவருக்கு சாட்சியாயிருக்கவே அழைத்துள்ளார். அழைப்பில் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை மதித்து, அவர்களுக்கு கீழ்படிந்து அடங்கியிருக்கவும் போதிக்கப்பட்டுள்ளோம். 

சீஷர்களாக்கப்பட்டவர்களில் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் அவரின் திருப்பணிகளை செய்ய மறுபடியும் அழைப்பு பெறுகின்றார்கள். அவரின் பணிக்கு அழைப்பு வருவது வரையிலும் தரித்திருக்கவும், பொறுத்திருக்கவும் வேண்டும். அழைப்பு பெற்ற தேவ மனிதர்கள் இயேசுவை மட்டுமே பின்பற்ற வேண்டும். இயேசுவின் அடிச்சுவடுகளில் மாத்திரமே நடந்துக்கொள்ள வேண்டும்.

ஜாதி அமைப்புகளையோ, கட்சி அமைப்புகளையோ பின்பற்றுவதற்கு அனுமதியில்லை. ஒரு கையில் வைபிளும், இன்னொரு கையில் காயமுண்டாக்கும் ஒன்றையும் வைத்துக்கொள்ள அனுமதியில்லை. ஊழியகாரர்கள் ஒரு கையில் வைபிளும், இன்னொரு கையில் சிலுவையும் மாத்திரமே பிடித்துக்கொள்ள அழைப்பு பெற்றுள்ளார்கள். சிலுவை சுமக்க தைரியமுள்ளவர்களாயிருப்போம், சிலுவையை சுமப்போம் என்று நம்பியே தம்மை பின்பற்றி வந்தவர்களுக்கு இந்த இரண்டையும் நம் கையில் தந்துள்ளார். இவைகளை பையிலே போட்டு விட்டு வாயில் வீரவசனமும், வீறாப்பும் பேசி சட்டங்களையும், காயப்படுத்தும், பகைக்க செய்யும் காரியங்களையும் கைகளில் சுமந்து செல்வது இயேசுவை பின்பற்றுவதல்ல. உலக உரிமைகளை பேசுவதற்கு இயேசு நம்மை இரட்சிக்கவில்லை. பரலோக உரிமைகளை விட்டு கொடுக்காதிருக்கவே இயேசு நம்மைஅ ழைத்துள்ளார். இவ்வுலகு சாராத அவரின் இராஜ்யத்தின் சேவகர்களாகிய ஊழியர்கள் கிறிஸ்துவினிமித்தம் இரத்தசாட்சிகளாக மாறுவதையே அவர் விரும்புகிறார். சபையை சட்டம் கொண்டு காக்க அல்ல, இரத்தம் சிந்தி காக்கவே தெரிந்துக்கொண்டார். சபை அமைப்பு ரீதியாக அதிகாரப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனாலும் பரலோகத்தின் குடிமக்களால் நிரம்பிய சபை பரலோக இராஜாவால் அங்கீகரிக்கப்படுவதே சிறப்பு. 

இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். 

அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர். நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார். என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். யோவான் 18:36,37;16:29-33.

ADD YOUR COMMENT

Powered By Indic IME