என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்து நிறைவாயிருக்கட்டும்
These things I have spoken to you, that My joy may remain in you, and that your joy may be full. (John 15:11)
Luke 15:32; John 16:24,33; John 17:13; Romans 15:13; 2Corinthians 1:24; Ephesians 5:18-21; Phi1ippians 1:25,26; 1 Thessalonians 5:16; 1Peter 1:8,9; 2John 1:12.
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். (யோவான் 15:11)
லூக்கா 15:32; யோவான் 16:24,33; யோவான் 17:13; ரோமர் 15:13; 2கொரிந்தியர் 1:24; எபேசியர் 5:18-21; பிலிப்பியர் 1:25,26; 1தெசலோனிக்கேயர் 5:16; 1பேதுரு 1:8,9; 2யோவான் 1:12.
நிறைவான சந்தோஷம்:
கிறிஸ்துவினிடமிருந்து வருகின்ற சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டுமெனில் செடியாகிய கிறிஸ்துவில் படர்ந்து வாழ வேண்டும். அவரது வசனத்தைக் கொண்டிருந்து அவரது அன்பிலே நிலைத்திருக்க வேண்டும். அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு அவரது அன்பிலே நிலைத்திருப்பதினால் மிகுதியான கனிகளைக் கொடுக்க இயலும். மிகுதியான கனிகளைக் கொடுப்பதினால் கிறிஸ்து மகிமைப்படுகிறார், சந்தோஷப்படுகிறார். இதனால் தன்னுடைய சந்தோஷத்தை அவர்களுக்கு கொடுக்கிறார். இந்த சந்தோஷம் சீஷர்களில் நிறைவாய் நிலைத்திருக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.
இயேசுகிறிஸ்துவின் சந்தோஷமானது கீழ்படிதலினாலும் அர்ப்பண வாழ்வினாலும் உண்டாவதாகும். அது அவர் தம்மை உலகிற்கு கொடுப்பதினால் உண்டாவது. இந்த மெய்யான சந்தோஷம் உலகியல் காரியங்களை விடவும் மேலானதாக இருப்பதினால் இதற்கு இணை எதுவும் இல்லை. இந்த சந்தோஷம் நம்மில் நிறைந்திருக்கும்போது நம்பிக்கை விசுவாசம் பெருகுகின்றது. அவரை சுமந்து செல்வதே வாழ்வின் லட்சியமாய் கொள்கின்றோம். எந்த ஒன்றும் நமக்கு இல்லையென்றாலும் இந்த சந்தோஷம் நம்மை திருப்தியுடையவர்களாகவே இருக்க செய்கின்றது.
இதனை தாவீது இரட்சண்ய சந்தோஷம் என்கிறார். பவுல் எல்லாவற்றிலும் மனரம்மியமாக இருக்க கற்றுகொண்டேன் என்றும் போதுமென்கிற மனதுடனேகூடிய தேவபக்தி என்றும் கூறுகின்றார்.
அவர் நமக்கு தந்துள்ள மெய் சந்தோஷத்தை இழக்காமல் வாழ்வதே உபத்திரவத்தில் வெற்றியடைவதற்கான வழி.
என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை. என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது. பிலிப்பியர் 4:10-14.