என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்

என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்

As the Father loved Me, I also have loved you; abide in My love.  (John 15:9)

John 15:13,11; John 17:23,26; Ephesians 3:18; 1John 2:28; Juda 1:20,21; Revelation 1:5.

பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். (யோவான் 15:9)

யோவான் 15:13,11; யோவான் 17:23,26; எபேசியர் 3:18; 1யோவான் 2:28; யூதா 1:20,21; வெளி 1:5.

கிறிஸ்துவின் அன்பு:

இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ள அன்பு அகாப்பே அன்பாகும். தேவனிடமிருந்து வந்ததினால் தேவ அன்பு எனப்படுகிறது. கிறிஸ்துவில் வெளிபட்டதினால் கிறிஸ்துவின் அன்பு எனப்படுகிறது. பிதாவாகிய தேவன் மேல் நாம் அன்பு வைக்கும்படியாய் பரிசுத்த ஆவி மூலமாக இந்த தேவ அன்பை இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அவர் ஊற்றியுள்ளார். ரோமர் 5:5.

இந்த அன்பு பாவம் செய்து பாவத்திலே மரித்து கொண்டிருந்த நம்மேல் பிதாவாகிய தேவனை கிருபை காண்பிக்க வைத்தது. தேவ கிருபை வெளிப்பட இந்த அன்பே காரணம்.

இந்த அன்பு தேவனுடைய ஒரே பேறான குமாரனை பாவம் போக்கும் பலியாகவும், மனிதரை மீட்கும் இரட்சகராகவும் உலகிற்கு கொண்டு வந்தது.

இந்த அன்பு கர்த்தராகிய இயேசுவை நமக்காக ஜீவனைக் கொடுக்கும்படியாக மரிக்க வைத்தது. ஒருவன் தன் சிநேகிதருக்காக ஜீவனை கொடுக்கிற அன்பிலும் பெரிது வேறில்லை.
இந்த அன்புதான் பரிசுத்த ஆவியானவரை இரட்சிக்கப்பட்ட நமக்குள் கொடுக்க வைத்தது. இந்த தூய ஆவியால் இந்த அன்பை நமது இரட்சிப்பின் பாத்திரத்தில் பெற்று கொண்டு முழு உலகையும் மீட்கும் அவரின் திட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்கிறோம்.

இந்த அன்பு இரட்சிக்கப்பட்ட யாவரிலும் ஊற்றப்பட்டுள்ளது. இந்த அன்பிலே நாம் நிலைத்திருக்க வேண்டும். இந்த அன்பினால் உலகை மீட்கிறோம். இந்த அன்பினால் சாத்தானையும் அவன் கிரியைகளையும் மேற்கொள்ளுகிறோம். இந்த அன்பினால் நிறம், இனம், மொழி, நாடு மறந்து ஒவ்வொருவரையும் நேசிக்கிறோம். இந்த அன்பினால் நம் ஜீவனையும் மீட்புக்காய் கொடுக்க துணிகிறோம். இந்த அன்பினால் நற்கிரியைகள செய்கின்றோம்.
கிறிஸ்துவின் அன்பு மட்டுமே… இந்த அன்பு தொடரட்டும், இந்த அன்பு படரட்டும்.

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:5-8.

ADD YOUR COMMENT

Powered By Indic IME